திங்கள், 30 மே, 2016

தோல்வியின் உளவியல்!
-------------------------------------------------
இதுவரை நடைபெற்ற வேறு எந்தத் தேர்தலையும் விட
2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள்
மிகவும் அதிகம். இது arithmetic கணக்கு அல்ல.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே
வென்று இருக்கின்றன. மற்றவர்கள் ஒரு
அடையாளத்துக்குக் கூட வெல்லவில்லை.

மூன்று முதலமைச்சர் வேட்பாளர்கள் படுதோல்வி!
அதிலும் இருவருக்கு டெப்பாசிட் கந்தல்!
நிதியமைச்சராக அறிவிக்கப் பட்டவர்,
கல்வி அமைச்சராக அறிவிக்கப் பட்டவர்
(கவனிக்கவும்: அறிவிக்கப் பட்டவர்)
மதுரையில் பதவிப் பிரமாணம் எடுக்கக்
காத்திருந்தவர் என்று மிகப் பலரை
செல்லாக்காசாக்கி விட்டனர் மக்கள்.
இதில் ஒருவர் சாகும்வரை அரசியலுக்கு வரமாட்டேன்
என்று ஓடிப்போய் விட்டார்.

எனவே, தோல்வியின் துக்கத்தில் இவர்கள்
அதீதமாக உளறக்கூடும். அவ்வாறு உளறுவதற்கு
அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நாம் செய்ய வேண்டுவதெல்லாம் அவர்களின்
உளறலைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான்.
எனவே, தோற்றுப் போனவர்கள், வீடுகளில்
இழவு   விழுந்தவர்கள், பகல் கனவு கண்டவர்கள்
இத்தியாதி நபர்கள் இத்தருணத்தில் தங்களின்
துக்கத்துக்கு வடிகால் தேடுவார்கள்.

ஒரு பூகம்பம் வராதா, பாக்கிஸ்தான்காரன்
அணுகுண்டு போடமாட்டானா என்றெல்லாம்
அவர்கள் மனம் ஏங்கக் கூடும். பித்துப் பிடித்த
இந்த மனநிலையில் இருந்து அவர்களால்
மிக மெதுவாகத்தான் வெளியேற முடியும்.

இதை உணருங்கள். தோற்றுப் போனவன், அவனை
ஆதரிப்பவன் இத்தியாதி ஆட்கள் என்ன
வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும்.
கண்டு கொள்ளாதீர்கள். குறிப்பாக தேமுதிக, பாமக
ஆட்களிடம் வாதம் செய்ய வேண்டாம்.

அதே நேரத்தில், பாஜக நண்பர்களிடம் பேசலாம்.
அதில் தவறில்லை. ஏனெனில் தாங்கள் வெற்றி
பெறுவதாக அவர்களுக்கு கனவுகூட வந்ததில்லை.
ஹெச், ராஜாவைப் பாருங்கள். வெற்றி பெற்றவர்களை
விட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்
எதிர்பார்த்ததை விட 13 வாக்குகள் அவருக்கு
அதிகமாக விழுந்திருக்கிறதாமே!
********************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக