மார்க்சிய அளவுகோல் (Marxian Scale)
அறிவை அளக்கும் மார்க்சிய முறைகள்
----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------
பல குட்டி முதலாளித்துவ விடலைகள்
மார்க்சிய சிந்தனைப்பள்ளி (Marxian School of Thought)
என்கிற சிந்தனை முறை இருப்பது பற்றியே
தெரியாமல் அறிவிலிகளாக இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் மார்க்சிய அறிஞர்கள்
(Marxian Scholars) பல்கிப் பெருகி வருகிறார்கள் என்பதும்
மார்க்சியக் கல்வி உலகெங்கும் மார்க்சிய
அமைப்புகளால் போதிக்கப்பட்டு வருகிறது
என்பதையும் அறியாத மூடர்களாக இவர்கள்
இருந்து வருகிறார்கள்.
அறிவு பற்றிய மார்க்சியப் பார்வை
இவர்களுக்குத் தெரியாது. அறிவை அளக்கும்
மார்க்சிய அளவுகோல் எத்தகையது என்றோ
அது மூளியான முதலாளித்துவ அளவுகோல்களில்
இருந்து எவ்விதம் வேறுபட்டது என்றோ
அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே இது
குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறோம்.
அந்த வரிசையில் இது மூன்றாவது கட்டுரை.
மார்க்சியப் பார்வையில் அறிவை அளவிடுதல்:
பாடத்திட்டம் (The syllabus)
--------------------------------------------
மொத்த மதிப்பெண்கள்: 100
1) கல்வி சார்ந்தது:
(academic knowledge): 20 மதிப்பெண்கள்
------------------------------------------------------------------
(கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,
புள்ளியியல், உளவியல், சதுரங்கம் (chess) ஆகியவை)
2) மார்க்சிய லெனினியம்: 50 மதிப்பெண்கள்
------------------------------------------------------------------------------
மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின்,மாவோ,
ரோசா லக்சம்பர்க், டிராட்ஸ்கி, புகாரின்,
பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, கிராம்சி,
லின் பியாவோ, அன்வர் ஹோக்ஸா,
ஹோசி மின், சாரு மஜும்தார், சிப்தாஸ் கோஷ்
ஆகியோரின் படைப்புகளில் கூறப்படும்
கொள்கையும் நடைமுறையும்
(Theory and practice).
3) பின்நவீனத்துவம்: 10 மதிப்பெண்கள்
--------------------------------------------------------------------
இருத்தலியல் (existentialism), அமைப்பியல்
உள்ளிட்ட எல்லா வகையான பின்நவீனத்துவக்
கோட்பாடுகளும். சார்த்தர், அல்தூசர், ஃபூக்கோ,
மார்ட்டின் ஹைடெக்கர், தெரிதா உள்ளிட்ட
அனைத்துப் பின்நவீனத்துவ அறிஞர்களின்
கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
4) இந்தியப் புரட்சியின் செயல் தந்திரமும்
போர்த்தந்திரமும்: 20 மதிப்பெண்கள்
(The tactics and strategy of Indian revolution); 1925 முதல்
இன்று வரை.
----------------------------------------------------------------------------------
தேர்வு முறை:
------------------------
1) கல்வி சார்ந்த அறிவைப் பொறுத்த மட்டில்,
ஒருவர் தமக்கு அறிவு அதிகம் என்று உரிமை
கோருவார் என்றால், அவர் கூறியதை அதன்
face valueஇல் அப்படியே ஏற்றுக் கொண்டு, அவருக்கு
அதிகபட்சமான 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அவரின் கூற்றே (statement) போதுமானது. இதற்கு
எவ்வித ஆதாரமும் அளிக்கத் தேவையில்லை.
2) 80 மதிப்பெண்களைக் கொண்ட மார்க்சியம்,
பின்நவீனத்துவம், இந்தியப் புரட்சி ஆகியவற்றில்
மார்க்சியர்கள் (Marxist scholars) நிரம்பிய சபையில்
தேர்வு நடைபெறும். audio round, visual round, oral,written,
viva ஆகிய பலவற்றில் தேவையானவை கடைப்
பிடிக்கப் படும்.
3)மேற்கூறிய 100 மதிப்பெண்கள் அடங்கிய
முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப்
பெற ஒருவர் ஒரு தகுதிகாண் தேர்வை
(eligibility test) எழுத வேண்டும். மார்க்சியம் அறியாத,
மார்க்சியப் புரிதல் (Marxian understanding) அறவே இல்லாத
வீணர்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு.
4) Eligibility test எப்படி இருக்கும்? இதோ ஒரு சில
மாதிரிக் கேள்விகள்.
கேள்வி-1: By mentioning the formulae of many organic compounds
like Methane, Ethane etc, (e.g: CnH2n+2, CH4, C2H6,.........) which
law of Hegelian dialectics is explained by Frederick Engles?
இதற்கு விடையாகத் தரப்படும் சில optionகளில்
இருந்து சரியான விடையை எழுத வேண்டும்.
சரியான விடை வருமாறு:
The quantitative change leads to a qualitative change.
அளவு மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும்
என்ற ஹெகலின் இயங்கியல் விதியை எங்கல்ஸ்
organic compounds மூலமாக விளக்குகிறார். எங்கல்சின்
இயற்கையின் இயங்கியல் (Dialectics of Nature) என்ற
பிரசித்தி பெற்ற நூலில் இருந்து இக்கேள்வி
எடுக்கப் பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக