வெள்ளி, 27 மே, 2016

ஊழியர் சங்கங்களின் நீண்ட காலக் கோரிக்கையை
ஏற்றும், மத்திய அரசு ஊழியர் ஊதியக் குழுவின்
(Central Pay Commission) பரிந்துரைகளை ஏற்றும்,
தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை-
போராட்டங்களின் கோரிக்கையை ஏற்றும்தான்
ஓய்வு பெறும் வயது 60 என்று அறிவிக்கப் பட்டது.
**
மாநில அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,
படிகள், சலுகைகள் ஆகியவற்றைக் கோரி வருகின்றன.
அக்கோரிக்கைகளில் மாநில அரசு (தமிழ்நாடு உட்பட)
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மத்திய அரசில்
உள்ளதுபோல 60 வயதாக உயர்த்தப்பட வேண்டும்
என்பது ஒரு பிரதான கோரிக்கை. Raising the retirement age
at par with CG employees என்பதே கோரிக்கை சாசனத்தில் உள்ள
வாசகம். இது சமச்சீர்மையைக் கோருகிறது.
**
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற மாநில
அரசு ஊழியர்களின் அறப்போராட்டங்கள் பலவற்றில்
பங்கேற்று உரை நிகழ்த்தியவன் என்ற அடிப்படையில்
தமிழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை
60 ஆக்க விரும்புகிறார்கள் என்பதை அனைவருக்கும்
உணர்த்த விரும்புகிறேன். 
**
58 வயதாக மத்திய அரசு ஊழியருக்கும் குறைக்க
வேண்டும் என்ற கருத்து கடைந்தெடுத்த
பிற்போக்கானது. மத்திய அரசு மற்றும் மத்தியப்
பொதுத்துறைகளில் பணியாற்றும் 50 லட்சம்
தொழிலாளர்களின் உணர்வுக்கு எதிரானதாகும். 
கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்கள்
இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக