ஞாயிறு, 29 மே, 2016

விடையும் விளக்கமும்
==========================
சரியான விடை= 3333.33 மீட்டர்.
திரு வேல்முருகன் சுப்பிரமணியன், திரு ஜான் ரூபர்ட்
ஆகிய இருவரும் சரியான விளக்கம் அளித்துள்ளனர்.
இயற்பியல் கணக்குகளில் units மிகவும் முக்கியம்.
kmph இலுள்ள வேகத்தை கணக்கின் தேவைக்கு ஏற்ப
meter per second என மாற்ற வேண்டிய தேவை வரும்.
**
இங்கு இந்த இடத்தில்,
தொலைவு = வேகம் * காலம்
= 600 *1000/3600 * 20
= 120000/36 = 3333.3 மீட்டர்
1000/3600 என்று unit conversion செய்யாமல் இக்கணக்கைச் 
சரியாகச் செய்ய முடியாது. வழக்கமாக இந்த இடத்தில் 
1000/3600க்குப் பதிலாக, நாம் 5/18ஐப் போடுவோம்.
இந்த இடத்தில் கவனம் தேவை.
5/18 என்ற conversion factorஐ இயல்பாகப் பயன்படுத்தும் 
கலை கைவர வேண்டும். மற்றப்படி, இந்தக் கணக்கில் 
மூளைக்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை. 


விடையும் விளக்கமும் 
------------------------------------------
சரியான விடை: கயிறு அறுந்து விடும்.
விளக்கம்:
------------------
குரங்கின் மீது இரண்டு விசைகள் செயல்படுகின்றன.
குரங்கின் எடை மற்றும் கயிற்றின் விறைப்பு.
எனவே, T-Mg = Ma
which implies, T = Mg+Ma
= (40x 9.8)+ (40X6)
= 632 N
But the rope can withstand only  550 N. So the rope will break.


அண்ணாச்சி,
அன்புமணி ஒரு மருத்துவரே தவிர மின்னணுப் பொறியாளர் அல்ல.
இரத்த ஓட்டம் பற்றியோ எலும்புத் தேய்மானம் பற்றியோ 
அவர் கூறினால் அது மதிக்கப்படும். மின்னணு EVM குறித்து 
அவர் கூறினால் அது ஏற்கப்படாது. உங்களுக்கு இதில் 
ஆர்வம் இருந்தால் தகுதி வாய்ந்த மின்னணுப் பொறியாளரை 
அணுகுங்கள்.
**
இரண்டாவது, அண்ணாச்சி வெறும் 60 ஓட்டும் 77 ஓட்டும் 
வாங்கி இருக்கிறீர்கள். உங்கள் திறமையை உழைப்பை 
தேர்தலில் வீணடிக்காமல் உருப்படியான வேலைகளைச் 
செய்து வரலாற்றில் இடம் பெறுங்கள். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக