வெள்ளி, 13 மே, 2016

மறைந்த தென்னிந்தியக் கணித மேதை
சகுந்தலாதேவி பற்றிய கட்டுரை!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
இம்மாத (மே 2016) "அறிவியல் ஒளி" இதழில்
நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதிய
சகுந்தலாதேவி குறித்து ஒரு சிறு கட்டுரை
பிரசுரமாகி உள்ளது.

அதில் தான் உருவாக்கிய ஒரு தேற்றத்தை
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைத்து
அதை கிட்டத்தட்ட ஒரு INDUCTION PROOF
பாணியில் நிரூபித்துள்ளது. அது வருமாறு:-

"ஒரு n இலக்க எண்ணை இன்னொரு n இலக்க
எண்ணினால் பெருக்கினால் கிடைக்கும்
பெருக்கல் பலன், அதிக பட்சமாக, 2n இலக்கங்களைக்
கொண்டதாகவும், குறைந்த பட்சமாக
2n-1 இலக்கங்களைக் கொண்டதாகவும்
இருக்கும்."  (Here n is the element of N)

நியூட்டன் அறிவியல் மன்றம்தான் இதை  முதன்
முதலில் கண்டு பிடித்தது என்று உரிமை கோரவில்லை.
2016இல் இதை யாராவது கண்டு பிடிக்கட்டும் என்று
நம் முன்னோர்கள் விட்டு வைப்பவர்களும் அல்ல.
ஆயினும், இது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு
நடைமுறையில் மிகவும் பயனுள்ள ஒரு  தேற்றம்
என்பதை யாரும் மறுக்க இயலாது.
**************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக