சனி, 14 மே, 2016

முதலாளித்துவ அறிவுஜீவியை விட
மார்க்சிய அறிவுஜீவி உயர்ந்தவர்
என்பதற்கான நிரூபணம்!
----------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------
சேஷாத்ரி, 25 வயது, வேதியியலில் முனைவர் பட்டம்.
(Ph.D in Chemistry). பல்கலை முதல் (university first).
தங்கப் பதக்கம் பெற்றவர். முதலாளித்துவ அறிவுஜீவி.

மணியரசன், வயது 25, வேதியியலில் முனைவர்,
பல்கலை முதல், தங்கப்பதக்கம் பெற்றவர்.
இவர் மார்க்சிய அறிவுஜீவி.

இருவரில் யார் அறிவில் உயர்ந்தவர்? யாருடைய
IQ அதிகம்? கண்டு பிடிப்போமா!

இருவரிடமும் பின்வரும் கேள்வி கேட்கப் படுகிறது.

கேள்வி: By mentioning the formulae of many organic compounds
like Methane, Ethane etc, (e.g: CnH2n+2, CH4, C2H6,.........) which
law of Hegelian dialectics is explained by Frederick Engles?  

Organic Chemistryயில் இருந்து ஒரு எளிய கேள்வி.
ஆனால் முதலாளித்துவ அறிவுஜீவிக்கு இதற்குப்
பதில் தெரியவில்லை.

மார்க்சிய அறிவுஜீவி சரியான விடையை
ஒரே வினாடியில் சொல்லி விடுகிறார்.
அவர் கூறிய சரியான விடை இதோ:

The quantitative change leads to a qualitative change.
அளவு மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும்
என்ற ஹெகலின் இயங்கியல் விதியை எங்கல்ஸ்
organic compounds  மூலமாக விளக்குகிறார். எங்கல்சின்
இயற்கையின் இயங்கியல் (Dialectics of Nature) என்ற
பிரசித்தி பெற்ற நூலில் இருந்து இக்கேள்வி
எடுக்கப் பட்டுள்ளது.

chemistry மட்டும் தெரிந்தால்  பத்தாது. chemistry ஐக் கொண்டு இயங்கியலை  நிரூபிக்கவும் தெரிந்து
இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான்
intellectual contribution to the cause of transformation of the society.  

முதலாளித்துவ அறிவுஜீவிகள் மூளியானவர்கள்.
அவர்களை விட மார்க்சிய அறிவுஜீவிகளே அறிவில்
உயர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்
படுகிறது. QED.
*************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக