அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவம்
(PRIVATE PRACTICE) செய்வது சரியா, தவறா?
ஒரு மார்க்சியப் பார்வை!
----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------
இந்தியாவில் இன்னமும் மருத்துவம் என்பது
எட்டாக்கனியாகவே ஏழை எளிய மக்களுக்கு
இருக்கிறது. மருத்துவர்-நோயாளி விகிதம்
ஆரோக்கியமாக இல்லை. பத்தாயிரம் பேருக்கு
ஒரு மருத்துவர் என்ற நிலைதான் இந்தியாவில்
உள்ளது.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பற்றாக் குறை
இருப்பதால், பல்வேறு இடங்களில் போலி
டாக்டர்கள் முளைத்து விடுகின்றனர். மேல் நர்சிங்
ஆர்டர்லியாக இருந்தவன் MBBS டாக்டர் என்று
போர்டு போட்டுக் கொண்டு தொழில் செய்கிறான்.
பி.காம் பெயிலாப் போனவன் டயோநில் மாத்திரையை
நீரிழிவு நோயாளிக்கு பிரிஸ்கிருப்ஷன் எழுதுகிறான்.
இந்த லட்சணத்தில், அரசு மருத்துவர்கள் தனியாக
மருத்துவம் பார்க்க (private practice) சில மாநிலங்களில்
தடை உள்ளது. இந்தத் தடை நியாயமற்றது. ஒரு
மருத்துவரை உருவாக்க மக்களின் வரிப்பணம்
கோடிக்கணக்கில் செலவிடப் படுகிறது. இவ்வளவு
செலவுக்குப்பின் வெளிவருகிற மருத்துவரை,
தனி மருத்துவம் பார்க்கக் கூடாது என்று தடை
விதிப்பது UNDER UTILISATION ஆகும். ஒரு மருத்துவரின்
முழுப்பயனும் சமூகத்திற்குக் கிடைக்காமல்
செய்வது சமூக விரோதச் செயலாகும்.
மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழிலாகும்.
24 மணி நேரமும் பணி செய்வதற்கு மனதளவில்
ஆயத்தமாகவே ஒவ்வொரு மருத்துவரும்
இருக்கின்றனர். மாரடைப்பு வந்த ஒரு நோயாளி
தகுந்த நேரத்தில் மருத்துவரை அணுகினால்,
அவர் நோயாளியை உயிர் பிழைக்க வைத்து
விடுகிறார். எனவேதான், படித்தவர்களும் சரி,
பாமரர்களும் சரி மருத்துவர்களை கடவுளுக்கு
அடுத்த நிலையில் வைத்து மதிக்கின்றனர்.
எவருடைய உத்தரவுக்கும் கீழ்ப்படியாத கலகக்
காரர்கள் கூட, மருத்துவரின் உத்தரவுகளுக்குக்
கீழ்ப்படிகின்றனர்.
ஆக, மருத்துவர்களின் சேவை கூடுதலாகத்
தேவைப் படுகிற ஒரு சமூகத்தில், மருத்துவர்கள்
பற்றாக்குறை பெரிதும் நிலவும் ஒரு சமூகத்தில்,
அரசு மருத்துவர்கள் என்ற காரணம் காட்டி,
அவர்களைத் தனி மருத்துவம் பார்க்கத்
தடை விதிப்பது மூடத்தனமானது.
அதிர்ஷ்ட வசமாக, தமிழ்நாட்டில் PRIVATE PRACTICEக்கு
தடை இல்லை. இந்த நிலை இந்தியா முழுவதும்
ஏற்பட வேண்டும்.
ஆகவே,
1) mushroom growth of quacksஐத் தடுக்க,
2) under-utilisation of qualified doctors என்ற அவலம் போக்க,
அரசு மருத்துவர்களின் private practice இந்தியா முழுவதும்
அனுமதிக்கப் படவேண்டும்
என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம் கருதுகிறது.
*************************************************************
பின்குறிப்பு: 11000 பேருக்கு ஒரு அரசு
மருத்துவர் என்ற நிலைதான் இந்தியாவில் உள்ளது.
இந்தியாவில் தற்போது பதிவு செய்து கொண்ட
அல்லோப்பதி மருத்துவர்களின் எண்ணிக்கை
9,4 லட்சம் என்று இந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.
(தகவல் ஆதாரம்: மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர்
ஜே பி நட்டா வெளியிட்ட, CBHI அமைப்பு தயாரித்த
(Cenral Bureau of Health Intelligence) National Health Profile 2015 என்ற
ஆவணம்; பார்க்க: The Hindu e paper dtd Sep 23, 2015)
------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக