மிகை மதிப்பீடு செய்யும் திருமாவளவனார்!
-------------------------------------------------------------------------------------
சுரேஷ் கண்ணனார் அவர்களின் பரிந்துரையை ஏற்று
திருமாவளவன் அவர்களின் ஒரு மணி நேர உரையைக்
கேட்டேன். சாரமற்ற உரை. தேர்தல் தோல்வியின்
காயங்கள் ஆறாத மனநிலையில் இருந்து பேசியுள்ளார்.
அனுதாபம் தேடல் என்ற நோக்கத்துடன் பேசிய பேச்சு
அவருக்கு அவர் விரும்பிய அனுதாபத்தைத் தேடித்
தந்துள்ளது. நிற்க.
**
சமூக வலைத் தளங்களில் கருத்து உருவாக்கம்
செய்வோரின் பங்கை (the role of opinion makers) மிகை
மதிப்பீடு செய்கிறார் திருமா. விஜயகாந்துக்கு ஒரு
கோமாளி பிம்பத்தை இவர்கள் (opinion makers)
உருவாக்கினர் என்கிறார். அதுவும், மநகூ இவருடன்
கூட்டணி வைத்த பிறகு விஜயகாந்தின் கோமாளி
பிம்பம் பெரிதாகக் கட்டப்பட்டது என்கிறார். இதில்
உண்மையில்லை.
**
விஜயகாந்தின் கோமாளி பிம்பம் இன்று இந்தத்
தேர்தலை ஒட்டி உருவானது அல்ல. 2011 சட்ட மன்றத்
தேர்தலின் பரப்புரையின்போது, இந்த பிம்பத்தை
விஜயகாந்தே உருவாக்கினார் என்பதுதான் உண்மை.
தனது கட்சி வேட்பாளரின் பெயரைத் தப்பாகச்
சொல்வதும், அதைத் திருத்த முயன்ற வேட்பாளரை
அடித்து உதைப்பதும் விஜயகாந்த் நிகழ்த்திய
கோமாளித் தனங்கள்.
**
இது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியபோது,
"என்னிடம் அடி வாங்கியவன் பெரிய ஆளாக வருவான்"
என்றார். வடிவேலுவின் எதிர்ப் பிரச்சாரம் மூலம்
விஜயகாந்தின் கோமாளித் தனங்கள் 2011
தேர்தலிலேயே வெளிப்பட்டு விட்டன.
**
சட்ட மன்றத்தில் ஜெயாவைப் பார்த்து, நாக்கைத்
துருத்திக் காட்டியது போன்ற செயல்கள் மூலம்
விஜயகாந்த் ஒரு கோமாளி என்பது 2011ஆம்
ஆண்டிலேயே தமிழகம் நன்கறிந்த விஷயம் ஆகும்.
**
காணாக்குறைக்கு, பத்திரிகையாளர்களின்
முகத்தில் த்த்தூ என்று காறித் துப்பி தான் ஒரு
well established clown என்று நிரூபித்தவர் விஜயகாந்த்.
**
"எக்காரணம் கொண்டும் ஒரு விலைமாது குடியிருந்த
வீட்டில் குடியேற வேண்டாம்; வழக்கமாக வருபவன்
கதவைத் தட்டாமல் விட மாட்டான்" என்பார் புதுமைப்
பித்தன். அதுபோல் ஏற்கனவே கோமாளி என்று
நிறுவப்பட்ட விஜயகாந்திடம் கூட்டணி வைத்தால்
அதன் பின்விளைவுகள் தவிர்க்க இயலாதவை.
**
எனவே, மநகூ விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு
முந்திய நிமிடம் வரை, விஜயகாந்த் சீரியசான
மனிதராக இருந்தார்; கூட்டணி வைத்த அந்த நொடி
முதல் opinion makers எல்லாரும் சேர்ந்து அவரைக்
கோமாளி ஆக்கி விட்டனர் என்று திருமாவளவன்
கூறுவது உண்மையல்ல. தோல்வியில் இருந்து
படிப்பினை பெற வர இவர் இன்னமும்
முன்வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
**
ஒரே ஒரு உதாரணம் மட்டுமே இங்கு கூறியுள்ளேன்.
மேலும் வைகோவின் கோமாளி பிம்பமும் அவரே
ஏற்படுத்திக் கொண்டதுதான். opinion makers உருவாக்கிய
பிம்பம் அல்ல அது. At the most, opinion makers can MAGNIFY things;
but they can't create a new one.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக