ஞாயிறு, 22 மே, 2016

ஜெயலலிதா அமைச்சரவையில்
ஒரு முஸ்லிம்கூட இல்லை!
கண்டிக்கத் திராணியற்ற அதிமுக ஆதரவு
முஸ்லிம் இயக்கங்கள்!
-----------------------------------------------------------------------------------
29 பேர் கொண்ட அமைச்சரவையை ஜெயலலிதா
அமைத்துள்ளார். அதில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட
இல்லை.

இருப்பினும், அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநித்துவம்
அளிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கக் கூட
அதிமுகவை ஆதரித்த எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை. காரணம் பெருவாரியான முஸ்லிம்
அமைப்புகள் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்
கொண்டு சோரம் போனவை.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் அவர்கள்
ஜெயாவை ஆதரித்தார். முஸ்லிம் சமூக வாக்குகளை
அதிமுகவுக்குத் திருப்பி விட்டார்.

திருமதி பாத்திமா அம்மையார் ஜெயாவை வலியச்
சென்று சந்தித்து ஆதரவை வழங்கினார்.
முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் பெண்களின்
ஆதரவை அதிமுகவுக்குப் பெற்றுத் தந்தார்.

இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப்
போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் இரண்டு.
1) கடையநல்லூரில் போட்டியிட்டுத் தோற்ற
ஷேக் தாவூது நடத்தும் ஒரு முஸ்லிம் கட்சி.
2) நாகப்பட்டினத்தில் போட்டியிட்டு வென்ற
தமீமுன் அன்சாரி தலைமையிலான மனித
நேய மக்கள் ஜனநாயகக் கட்சி. இவர்கள்
இருவரில் எவருக்கேனும் முஸ்லிம் அமைச்சர்
ஒருவர்கூட இடம் பெறாத ஜெயாவின்
அமைச்சரவையைக் கண்டித்துக் குரல் கொடுக்க,
இல்லை, இல்லை, முனகக் கூட தைரியம் கிடையாது.
    
தமிழக சட்ட மன்றத்தில் தற்போதுள்ள
232 உறுப்பினர்களில் மொத்தம் நான்கு பேர்
முஸ்லிம்கள். அதிமுக கூட்டணியில் 2 பேர்
மற்றும் திமுக கூட்டணியில் 2 பேர் என்று
மொத்தம் நான்கு பேர்.

1) திருமதி டாக்டர் நிலோபர் கபில், அதிமுக,
வாணியம்பாடி.
2) தமீமுன் அன்சாரி, மமஜக, நாகப்பட்டினம்.
இவ்விருவரும் அதிமுக தரப்பு முஸ்லிம்கள்.

டி.பி.எம். மைதீன் கான், திமுக, பாளையங்கோட்டை
முகமது அபூபக்கர், IUML, கடையநல்லூர்
ஆகிய இருவரும் திமுக தரப்பு முஸ்லிம்கள்.

ப்ர்ர்பட்டோர் நலம், சிறுபான்மையினர் நலம்
ஆகிய இரு துறைகளையும் அமைச்சர் ஸ்ரீரங்கம்
வளர்மதிஇடம் கொடுத்துள்ளார். சிறுபான்மையினர்
நலத்துறைக்கு, சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த
ஒருவரை அமைச்சராக்க ஜெயா முன்வரவில்லை.
இருப்பினும், பணம் வாங்கிக் கொண்டு, ஜெயாவிடம்
சோரம் போன முஸ்லிம் அமைப்புகள் எதுவும்
ஜெயாவைக் கண்டிக்க முன்வரவில்லை.
****************************************************************    

  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக