திங்கள், 23 மே, 2016

திருமாவளவனுக்கு மன்னிப்பே கிடையாது!
விஜயகாந்த் உருவில் அம்பேத்கரைக் கண்டேன்!
---------------------------------------------------------------------------------------
தேர்தல் அரசியல் என்றாலே கொள்கைகளைச்
சவக்குழிக்கு அனுப்பி விட்டு, தரம் தாழ்ந்து
 இழிவின் எல்லைக்குச் செல்வதுதான் என்று
திருமாவளவன் எண்ணியுள்ளார்.

"விஜயகாந்த் உருவில் நான் அம்பேத்கரைப்
பார்க்கிறேன்" என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது
பேசி, இழிவின் உச்சத்தைத் தொட்டார் திருமா.

புழுவினும்  கீழான ஒரு ஈனப்பயலுக்கு, கோமாளிக்குப்
பல்லக்குத் தூக்குவது திருமாவளவனின் உரிமை.
ஆனால், அதற்காக விஜயகாந்தை அம்பேத்கருடன்
ஒப்பிட திருமாவளவனுக்கு உரிமை கிடையாது.
இதை விட யாரும் அம்பேத்கரை அவமானப்
படுத்தி விட முடியாது.

காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட இவர்
87 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுப்
போனார். மக்கள் நலக் கூட்டணியின் மற்ற
வேட்பாளர்களைப் போல இவரும் அதிகமான
வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போய்
இருப்பார்.

ஆனால், தொகுதியில் உள்ள திமுக சிந்தனைக்
குள்ளர்கள் இவருக்கு வாக்களித்தனர். மேலும்
இவரை எதிர்த்து திமுக வேட்பாளரை கலைஞர்
நிறுத்தவில்லை. காங்கிரசுக்கு இத்தொகுதியைக்
கொடுத்தார் கலைஞர்.

காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட, திருமாவுக்கு
வாக்களிக்கலாம் என்று கருதிய கணிசமான
திமுக சிந்தனைக் குள்ளர்கள் இவருக்கு
வாக்களித்தனர். இதனால்தான் இவர் குறைந்த
வாக்கு வித்தியாசத்தில் தோற்று சிலரின் 
அனுதாபத்தைப் பெற  முடிந்தது.

எனினும், விஜயகாந்தை அம்பேத்கருடன் இவர்
ஒப்பிட்டது என்றும் நீங்காத ஒரு கரும்புள்ளியாகவே
இருக்கும்.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக