வியாழன், 26 மே, 2016

ஐயா,
தங்கள் மகள் கண்டிப்பாக XIIஇல் வணிகக் கணிதம்
(Business Maths) எடுத்துப் படிக்க வேண்டும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது. CA படிப்பது
என்பது நோக்கமானால் கண்டிப்பாக BUSINESS MATHS
எடுக்க வேண்டும். அப்போதுதான் CA படித்துத் தேறுவது
சுலபமாக இருக்கும். COMPUTER SCIENCE பாடத்தை
எப்போது வேண்டுமானாலும் தனியாக APTECH, NIIT
வாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும். எனவே XI, XII
வகுப்புகளில்  BUSINESS MATHS படிக்கத் தவறினால்,
பின்னர் வருந்த வேண்டியது நேரும்.
**
இளமையில் கல் என்பது அறிவியல் பாடங்களுக்கு
மட்டுமே பொருந்தும். 60 வயதுப் பெரியவர்கூட
எம்.ஏ ஆங்கில இலக்கியம், வரலாறு ஆகியவற்றில்
பட்டம் பெற முடியும். ஆனால் படிக்க வேண்டிய அந்த
TEEN AGEஇல் கணிதமும் அறிவியலும் படிக்கத் தவறினால்
பின்னர் வாழ்நாள் முழுவதும் படிக்க இயலாமல் போகும்.
படிக்க முயன்றாலும் கடினமாக இருக்கும்.
**
பன்னிரண்டாம் வகுப்பு வரை கணக்கு அறிவியல்
பாடங்கள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற
கருத்தை நியூட்டன் அறிவியல் மன்றம் தொடர்ந்து
வலியுறுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக