திங்கள், 30 மே, 2016

திரு பிரகாஷ் பொற்செழியன், வீரராகவன், ஜான் ஆகியோரின் 
கருத்துகள்/விவாதங்கள் கணக்கைச் செம்மைப் படுத்தி 
உள்ளன. இந்தக் கணக்கு மிகவும் புகழ் பெற்ற கணக்கு.
வகுப்பில் பாடம் எடுக்கும்போது இந்த portion எல்லாம் 
மிகவும் dry ஆக இருக்கும் என்று மாணவர்களில் பலரும் 
கருதுவார்கள். இது போன்ற கணக்குகள் இந்த வறண்ட 
பாடத்துக்குச் சுவை ஏற்றுபவை. 


மொத்தமே தேர்வு நேரம் என்பது 3 மணி நேரம்தான். 
அதாவது 180 நிமிடம்தான். 180 கேள்விகள் இருக்கும்.
ஒரு கேள்விக்கு 1 நிமிடம் என்பது சராசரியாகக் 
கிடைக்கும் நேரம். ப்ளஸ் டூ தேர்வு மாதிரி எழுதிய 
விடையை சரிபார்க்க என்று 5 நிமிடம் ஒதுக்க முடியாது.
நெகடிவ் மதிப்பெண் உண்டு. எனவே தீர்மானமாக 
முடிவு எடுத்த பிறகே  விடை எழுத வேண்டும்.
**
கணக்குகள் கொடுப்பதே conceptஐப் புரிந்து கொள்ளத்தான்.
இதில்  practice makes a man perfect என்பதுதான் வெற்றிகரமான பாதை.

சரியான விடையும் விளக்கமும்:
---------------------------------------------------------------

பையன் பந்தைப் பிடித்து விடுவான். இதுவே சரியான விடை.
பந்தின் திசைவேகம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
செங்குத்துக்கூறு, கிடைமட்டக்கூறு என்று.
செங்குத்துக்கூறு பற்றிக் கவலயில்லை. 
கிடைமட்டக்கூறின் வேகம் = 0.5 (cos 60=0.5)
பையனின் வேகம்= பந்தின் பாதி வேகம்= 0.5
**
கிடைமட்டக்கூறின் வேகமும் பையனின் வேகமும் சமம்.
எனவே பையன் பந்தைப் பிடித்து விடுவான்.
**  
பின்னூட்டங்கள் வாயிலாக இக்கணக்கிற்கு 
செழுமையான விளக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக