வெள்ளி, 20 மே, 2016

தளி ராமச்சந்திரனும் திருமாவளவனும்
மட்டுமே இரண்டாம் இடம் பெற்றுத் தோற்றனர்!
---------------------------------------------------------------------------------------
234 தொகுதிகளிலும் போட்டியிட்டது மக்கள் நலக்
கூட்டணி. 234 தொகுதிகளிலும் தோற்றது.

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர்
வேட்பாளர் விஜயகாந்தே டெப்பாசிட் இழந்தார்.

234 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்
மட்டுமே மநகூ இரண்டாம் இடத்தில் வந்துள்ளது.

1) தளி ராமச்சந்திரன் தளி தொகுதியிலும்
2) திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலிலும்
இரண்டாம் இடம் பெற்றுத் தோல்வி அடைந்தனர்.
**************************************************************
மநகூவின் கேவலமான தோல்விக்குக் காரணம் என்ன?
-------------------------------------------------------------------------------------------------
மநகூவின் இவ்வளவு கேவலமான படுதோல்விக்குக்
காரணம் எந்தத் தகுதியும் இல்லாத கோமாளியான
விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக
அறிவித்ததே.
*************************************************************

வைகோ பொறுப்பேற்க வேண்டும்!
--------------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணியை வரலாறு கண்டிராத
படுகேவலமான தோல்விக்குத் தள்ளிய
வைகோ, தோல்விக்குப் பொறுப்பேற்று
அரசியலை விட்டே விலக வேண்டும்
என்ற கோரிக்கை மநகூ கட்சித் தொண்டர்களிடம்
வலுவாக எழுந்து வருகிறது.
****************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக