(5) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தி வரும்
விவாதங்கள் இங்கு தொகுக்கப் படுகின்றன!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தி வரும்
விவாதங்கள் இங்கு தொகுக்கப் படுகின்றன!
-----------------------------------------------------------------------------------
எல்லா ஆற்றல்களையும் ஒட்டுமொத்தமாக ஒருங்கேபெற்ற "திருவாளர் கடவுள்" ஏன் தனித்தனியே நல்லவர்களையும் தீயவர்களையும் படைத்து பிறகு அவர்கள் மூலம் கொலை கொள்ளை, வன்முறைகள், ஏழை, பணக்காரன், சாதியியல் கொடுமைகள் இன்னும் எண்ணற்ற காரியங்களை மேற்படி நபர்கள் மூலம் நிகழ்த்தி, பிறகு அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும், அது மட்டுமன்றி இது கோமாளித்தனமான செயல் மற்றும் காலவிரயம் என்றாகிவிடுகிறதல்லவா!!!!!
அதற்கு பதிலாக பிறக்கும் போதே தமது மேற்படி ஆற்றல்களால் அவர்களை நல்வழிப்படுத்தியிருக்கலாமே...... ஒருவேளை எல்லாம் "விதி" அல்லது "பிறவிப் பயன்" மேலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை யாராலும் தடுக்கவும் மாற்றியமைக்கவும் முடியாது என்று சொல்லப்படும் பட்சத்தில்....... கடவுளுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது என்பதோடு அப்படி கடவுள் என்ற ஒன்று இல்லை என்பது எந்த மறுதலிப்பிற்கும் இடமின்றி நிரூபிக்கப்படுகிறது என்று அறிக!!!!
உதாரணமாக இயற்கை சீற்றத்தினால் கடல் சீற்றம் வந்து சுமார் ஒரு இலட்சம் பேர் இறந்துவிடுவதாகவும் இரண்டு இலட்சம் பேர் உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால்....... இதில் கடவுள் எங்கே வருகிறது; கடல் சீற்றம் முழுவதும் எப்படி உருவானது என்றும் எப்பொழுது மற்றும் எத்தனை ரிக்டர் அளவில் உருவானது என்றும் அறிவியல் துணை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறபோது கடவுள் என்ற கற்பனை கதாபத்திரத்தின் வேலை எங்கே வந்தது!!!! (பார்த்திபன் பக்கிரிசாமி)
------------------------------------------------------------------------------------
பங்கேற்பு:
அ) அருண் பழனியப்பன்
ஆ) வீரராகவன் RJ
இ) ஜான் ரூபர்ட் எம்
ஈ)வேல்முருகன் சுப்பிரமணியன்
உ) பார்த்திபன் பக்கிரிசாமி
ஊ)வே பாண்டி
மற்றும் பலர்.....
அ) அருண் பழனியப்பன்
ஆ) வீரராகவன் RJ
இ) ஜான் ரூபர்ட் எம்
ஈ)வேல்முருகன் சுப்பிரமணியன்
உ) பார்த்திபன் பக்கிரிசாமி
ஊ)வே பாண்டி
மற்றும் பலர்.....
******************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக