வெள்ளி, 27 மே, 2016

சமச்சீர் கல்வியை எதிர்த்த போலிக் கம்யூனிஸ்டுகள்
சட்டமன்றத்துக்குள் செல்ல முடியவில்லை!
-----------------------------------------------------------------------------------------------
ஜூன் மாதம் தமிழக சட்ட மன்றம் கூடுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இதே போல், ஜூன் 2011இல்
தமிழக சட்ட மன்றம் கூடியது.

தற்போது மரணப் படுக்கையில் கிடக்கும் பார்ப்பன
சோவின் ஆலோசனையின் பேரில், சமச்சீர் கல்வியை
ஒழித்துக் கட்டும் மசோதாவை அதிமுக அரசு
கொண்டு வந்தது.

அப்போது, சமச்சீர் கல்வியை எதிர்த்து வீராவேசத்துடன்
வலது இடது போலிக் கம்யூனிஸ்ட்களான CPI,CPM
சட்ட மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள் ராஜனை
மிஞ்சிய ராஜ விசுவாசியாக போலிகள் சமச்சீர்
கல்விக்குக் கொள்ளி  வைத்தார்கள்.

இன்று,  சட்டமன்றத்துக்கு  உள்ளே இந்தப் போலிகளால்
போக முடியவில்லை. மக்களால் காயடிக்கப் பட்ட
இந்தப் போலிகள் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று
ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமா? மனித நேய மக்கள் கட்சி
என்ற பெயரிலான ஜவஹரில்லா தலைமையிலான
முஸ்லிம் பிழைப்புவாதக் கட்சியும் இம்முறை
சட்ட மன்றத்துக்குள் போக முடியவில்லை.
இவர்களும் ஜெயாவுடன் சேர்ந்து கொண்டு சமச்சீர்
கல்வியை எதிர்த்தவர்கள்.

காலம் இவர்களின் தவறுக்கு தண்டனை
வழங்கி விட்டது.
********************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக