சனி, 7 மே, 2016

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு!
மே 6, 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
மாநில அரசுகள் தேர்வு நடத்தலாம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
NEET தேர்வு குறித்து ஏப்ரல் மாதம் முதல்
ஒவ்வொரு விசாரணையின் போதும்
உச்சநீதிமன்றம் தீர்ப்புகளைத் தொடர்ந்து
அளித்து வருகிறது. மே 6 தீர்ப்பு பின்வருமாறு:-

1) தனியார் கல்லூரிகளும் நிகர்நிலைப்
பல்கலைகளும்  நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது.

2) நடப்பாண்டிற்கான (2016 கல்வியாண்டு)
சேர்க்கைக்கு அந்தந்த மாநில அரசுகள் தாங்கள்
நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ஒரு ஆண்டுக்கு மட்டுமே இந்த அனுமதி.

நீதியரசர் அனில் தவே தலைமையிலான இந்த
அமர்வு தொடர்ந்து தனியார் நடத்தும் போலியான
மோசடித் தனமான கண்துடைப்பு நுழைவுத்
தேர்வுக்கு எதிராகவே தீர்ப்புச் சொல்லி
வருகிறது. இது பாராட்டத் தக்கது.
***********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக