சனி, 21 மே, 2016

தேமுதிகவுக்கு கருமாதி செய்தார் ராஜேஷ் லக்கானி!
------------------------------------------------------------------------------------------------
தமிழகத் தேர்தல் ஆணையம் இன்று (21.05.2016)
வெளியிட்ட அறிவிப்பின்படி, தேமுதிக கட்சியின்
அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டது. மேலும்
அக்கட்சியின் தேர்தல் சின்னமாகிய முரசு சின்னமும்
தேர்தல் ஆணையத்தால் பறிக்கப் பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் தேமுதிகவுக்கு கருமாதி
செய்தார் தமிழகத் தேர்தல் ஆணையர்
ராஜேஷ் லக்கானி.

அ) சட்டமன்றத் தேர்தல் என்றால், 30 தொகுதிகளுக்கு
ஒன்று என்ற வீதத்தில் எட்டு இடங்களைப் பெற்றிருக்க
வேண்டும்.
ஆ) அல்லது பதிவான வாக்குகளில் 6 சதம் பெற்றிருக்க
வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை
நிறைவு செய்தால் மட்டுமே ஒரு கட்சி அங்கீகாரம்
பெற முடியும். தேமுதிக சட்ட மன்றத்தில் பூஜ்யம்
இடங்களையும், 2.4 சதம் வாக்குகளையும் மட்டுமே
பெற்று, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை
நிறைவு செய்ய இயலவில்லை.

எனவே, தேமுதிக மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை
இழந்து விட்டது. முரசு சின்னத்தையும் இழந்து
விட்டது.

போட்டியிட்ட 104 இடங்களிலும் டெப்பாசிட் இழந்தது
தேமுதிக. உச்சகட்ட அவமானமாக, முதலமைச்சர்
வேட்பாளர் என்று வறட்டு ஜம்பம் அடித்த விஜயகாந்த்
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெப்பாசிட் இழந்தார்.

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே தேமுதிக போல
எந்தக் கட்சியும் இவ்வளவு கேவலத்தைச் சந்தித்தது
இல்லை. இனி பேச வேண்டிய அவசியமே இல்லை.
தேமுதிக செத்துப் போய் விட்டது. பிணத்துக்குக்
கொள்ளி வைத்தாகி விட்டது. இன்று ராஜேஷ்
லக்கானி கருமாதியும் செய்து விட்டார்.
*************************************************************************** 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக