மதிமுகவுக்கு திதி!
----------------------------------
தேமுதிக இந்தத் தேர்தலில்தான் (2016) உயிரை
விட்டது. எனவே நேற்று அதற்குக் கருமாதி
செய்தார் ராஜேஷ் லக்கானி.
ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலிலேயே மதிமுக
இறந்து விட்டது. அதன் பிறகு 2014 நாடாளுமன்றத்
தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்டு எல்லா
இடங்களிலும் தோற்றது. வைகோவும் தோற்றார்.
மதிமுக ஏழு தொகுதிகளிலும் சேர்த்துப் பெற்ற
வாக்குகள் 3.6 சதம் மட்டுமே (14,16,035 வாக்குகள்)
அங்கீகாரம் பெறுவதற்கு 2 நாடாளுமன்ற இடங்களில்
வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 சதம்
வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டில்
ஒன்றைக் கூடப் பெறாததால் 2014 தேர்தலில்
மதிமுக அங்கீகாரம் இழந்தது.
தற்போது 2016 தேர்தலிலும் அங்கீகாரம் இழந்தது.
அங்கீகாரம் இழந்த காலத்தில் இருந்து ஆறு
ஆண்டுகளுக்கு பழைய சின்னத்தை வைத்துக்
கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணைய விதிப்படி,
மதிமுக 2017 வரை (2011 முதல் 2017 வரை ஆறு ஆண்டுகள்)
பம்பரம் சின்னத்தை வைத்துக் கொள்ளலாம்.
சான்றாக, 2017 டிசம்பரில் ஒரு இடைத்தேர்தல் வந்தால்,
அதில் மதிமுக போட்டியிட்டால், அக்கட்சிக்கு
பம்பரம் சின்னம் கிடைக்காது. அது சுயேச்சை
சின்னங்களில் இடம் பெரும். அதாவது, பம்பரம்
சின்னத்தை ஒரு சுயேச்சை வேட்பாளரும்
மதிமுகவும் கேட்கிறார்கள் என்றால், சீட்டுக்
குலுக்கிப் போட்டு பம்பரம் யாருக்கு என்று
முடிவு செய்யப்படும்.
ஆக, மதிமுக இறந்து ஐந்து ஆண்டுகள் முடிந்து
விட்டன. ஏற்கனவே மதிமுகவின் கருமாதி
2011ஆம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. தற்போது,
2016இல் மதிமுகவுக்கு திதி (திவசம்) நடக்கிறது.
அய்யரைக் கூப்பிட்டு பச்சரி, வாழக்காய்,
தட்சணை எல்லாம் கொடுத்து மிகவும்
சிறப்பாக மதிமுகவுக்கு திதி கொடுத்து
முடித்து விட்டார் ராஜேஷ் லக்கானி.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக