வெள்ளி, 27 மே, 2016

கணக்கு வராது என்பது பிரமையே!
---------------------------------------------------------------------
எனக்கு MATHS வராது என்று குழந்தைகள் நினைப்பதும்,
என் பையனுக்கு MATHS வராது என்று பெற்றோர்கள்
நினைப்பதும் ஒரு பிரமையே (ILLUSION). இந்த சமூகம்
இதுபோன்ற பிரமைகளுக்கு தீனி போட்டு வளர்க்கிறது.
கணக்கு வராது என்பதில் உண்மையில்லை; நாமாக
ஏற்படுத்திக்கொண்ட ஒரு மனத்தடை தான்.
**
எனவே எந்த ஒரு மாணவனும் கணக்குப் பாடத்தில்
ஒரு PRACTICAL WORKING KNOWLEDGE பெற முடியும்.
தேற முடியும். 60 சதம் வரை மதிப்பெண்களைப் பெற
முடியும். இப்போது கூறியது CBSE பாடத்திட்டத்தைப்
பொறுத்துச் சொல்லப் படுவது. TN STATE BOARD என்றால்
எவர் ஒருவரும் 80 சதம் பெற முடியும்.
**
Core Mathsஐ விட Business Maths இன்னும் எளிது. டீன் ஏஜ்
குழந்தைகளுக்கு formal educationதான் சிறந்தது. khan academy
போன்ற informal sources மூலம் கல்வி பெறுவதை விட,
முறையான கல்வி பெறுதல் வேண்டும்.
**
எனவே எமது பரிந்துரை:
First option: Maths, Physics, Chemistry, Biology
Second option: Maths,Physics,Chemistry,Statistics
Third option: Business Maths, Statistics, Commerce, Accountancy
எமது வலியுறுத்தல்:
------------------------------------
Maths அல்லது Business Maths இல்லாமல் எந்த ஒரு
Groupஐயும்  எடுக்க வேண்டாம்.
................நியூட்டன் அறிவியல் மன்றம்................
பின்குறிப்பு: 12ஆம் வகுப்பு வரை கணிதம் (core maths)
கட்டாயப் பாடம் என்று சட்டம் போட்டு அதை
நடைமுறைப் படுத்தாமல் இந்தியாவுக்கு விடிவு இல்லை.


    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக