வெள்ளி, 6 மே, 2016

கடவுள் உலகைப் படைத்தார் என்பதை ஏற்றுக்
கொண்டால், இந்த உலகம் ஒரு செயப்படுபொருள்
என்றாகி விடுகிறது. இது தவிர்க்க இயலாமல்,
கடவுளும் ஒரு செயப்படுபொருளே என்ற
கருத்துக்கு இட்டுச் செல்கிறது. அதாவது
கடவுளை யார் படைத்தார் என்ற கேள்விக்கு
இட்டுச் செல்கிறது. இது தர்க்கத்தின் தவிர்க்க
இயலாத நீட்சி, (unavoidable logical continuation).
**
இதை மறுக்க, கடவுளைத் தவிர எல்லாமே
படைக்கப்பட்டவை; கடவுள் மட்டுமே சுயம்பு;
அதாவது சுயமாகத் தோன்றினார் என்று
ஒரு கருத்தை கடவுள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.
இது தவிர்க்க இயலாமல் இந்தத் தர்க்கத்தின்
முரணை அம்பலப் படுத்தி விடுகிறது.
**
கடவுள் சுயமாகத் தோன்றினார் என்றால், ஏன்
இந்த உலகமும் சுயமாகத் தோன்றி இருக்க
முடியாது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு
கடவுளின் தரப்பில் விடை இல்லை. ஆக மொத்தத்தில்
கடவுள்தான் படைத்தார் என்ற வாதம் வயிற்றில்
குத்துப்பட்டு குடல் சரிந்து ரத்தம் இழந்து இறந்து
பொய் விடுகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக