பெரியவர்கள் சிறுவர்களின் தலையில் குட்டுவது,
பிள்ளையாரை வணங்குகையில் தாமே தம்
தலையில் குட்டிக் கொள்வது, ஆசிரியர்கள்
மாணவர்களின் தலையில் குட்டுவது ஆகியவை
நம்மிடம் உள்ள பழக்கங்கள். எனவே இவற்றுக்குத்
தமிழில் சொற்கள் உண்டு.
**
ஆங்கிலேயர்களிடம் இந்தப் பழக்கம் கிடையாது.
அதாவது இந்தச் செயல் கிடையாது. செயல்
இல்லாததால் அதைக் குறிக்கும் சொல்லும் இல்லை.
அதற்கான தேவையும் இல்லை.
**
ஆங்கிலத்தில் சித்தப்பா சித்தி பெரியம்மா பெரியப்பா
ஆகிய உறவுமுறைப் பெயர்களுக்குச் சொல் இல்லை.
ஏனெனில் அத்தகைய உறவுமுறைகள் அங்கு நடப்பில்
இல்லை.
**
மொழி என்பது பிரதேசம் சார்ந்தது. எனவேதான்
நெல்லைத் தமிழ் என்றும் சென்னைத்தமிழ் என்றும்
கிளைமொழிகள் (dialects) உருவாகின்றன. இவற்றை
வட்டார வழக்குகள் என்று சொல்கிறோம்.
**
எனவே குட்டுதல் என்ற சொல் ஆங்கிலத்தில்
இல்லாததில் வியப்பில்லை. ஒரு பிரதேசத்தில்
பெருவழக்காய் இருக்கும் சொல், இன்னொரு
பிரதேசத்தில் இல்லாமல் இருப்பது இயல்பே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக