உலகிலேயே சுலபமான மருத்துவ நுழைவுத் தேர்வு
எது தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள ஜேப்பியார்,
பாரிவேந்தர் போன்ற சுயநிதி முதலைகள் நடத்தும்
நுழைவுத் தேர்வுதான். எப்படி இது சுலபமானது?
கேள்வித்தாளுடன் விடைத்தாளையும் சேர்த்துக்
கொடுத்து விடுவார்கள்.
**
ஒரு கோடி, இரண்டு கோடி முதல் 5 கோடி வரை
MBBS சீட்டுக்கு வாங்கும் சுயநிதி முதலைகளின்
கொள்ளையில் இன்று மண் விழுந்து விட்டது.
சமத்துவ மருத்துவர் சங்கத்தின் தலைவர் தோழர்
ரவீந்திரநாத் எமது நண்பரே. அவரின் நிலைபாட்டையும்
யாம் அறிவோம். எமது நிலைப்பாடு வேறு; அவரின்
நிலைப்பாடு வேறு.நுழைவுத் தேர்வு வேண்டும் என்பதில்
இருவரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறோம்.
திரு அரங்க குணசேகரன் அய்யா,
தங்களைப் போன்ற பெருமகனாரும் மேன்மக்களும்
அறிந்து வைத்திருக்கக் கூடிய அளவுக்கு, எந்தவித
முக்கியத்துவமும் அற்ற-- டாக்டர் சுப்பிரமணியம்
சுவாமியின் மொழியில் கூறுவதனால்--ஒரு பறையன்
நான். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நியூட்டன்
அறிவியல் மன்றத்தை நடத்தி வருகிறேன். அறிவியல்
பரப்புதல் (SCIENCE COMMUNICATION) எமது பணி.
**
அரசியல் ரீதியாக, வர்க்க எதிரிகளை அழித்தொழிக்க
வேண்டும் (annihilation of class enemies) என்ற சாரு மஜும்தாரின்
கோட்பாட்டால் கவரப்பட்டு மா-லெ இயக்கத்தில்
பணிபுரிந்து வருபவன் நான்.
**
தங்களோடு விவாதிக்க நான் தயார். ஆனால் என்னுடன்
விவாதிக்க தங்களைப் போன்ற குட்டி முதலாளித்துவ
மேன்மக்கள் முன்வருவீர்களா, பெருமகனாரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக