ஞாயிறு, 8 மே, 2016

சமச்சீர்க் கல்விக்குக் கொள்ளி  வைத்து
போலிக் கம்யூனிஸ்டுகள் சட்ட மன்றத்தில்
பேசிய பேச்சு! ஆதாரம் பாரீர்!
-----------------------------------------------------------------------------
சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த கலைஞர்
2011 தேர்தலில் பதவி இழக்கிறார். ஜெயா முதல்வர்
ஆகிறார்.

பார்ப்பன துக்ளக் சோவின் ஆலோசனைப்படி,
சமச்சீர் கல்வியை ஒழிக்க சட்டத் திருத்தம்
கொண்டு வருகிறார் ஜெயா. கொண்டு வந்த நாள்:
ஜூன் 7,2011.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி வீ சண்முகம்
சமச்சீர் ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வருகிறார்.
அதிமுக, தேமுதிக, CPI, CPM கட்சிகள் உள்ளிட்ட
பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் சமச்சீர் ஒழிப்பு
மசோதா சட்டமாக நிறைவேறுகிறது.

மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர்
மசோதாவை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டு
வெளிநடப்புச் செய்கின்றனர்.

மசோதா மீதான விவாதத்தின் போது, மார்க்சிஸ்ட் கட்சி
எம்.எல்.ஏ , திரு கே பாலகிருஷ்ணன் சமச்சீர் கல்வியைக்
கண்டித்து ஆவேசமாகப் பேசுகிறார்.
(ஆதாரம்: தினமணி, சென்னை, ஜூன் 8,2016, பக்கம்-9)

அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ திரு ஆறுமுகம்
சமச்சீருக்குக் கொள்ளி  வைத்துப் பேசும்போது,
"இந்த சட்ட முன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவு"
என்று ஆவேசம் கொள்கிறார்.
(ஆதாரம்: தினமணி சென்னை ஜூன் 8, 2016: பக்கம்-9)

சமச்சீர் கல்வியை ஒழித்துக் கட்டுவதுதான்
சமூகநீதியாம். எப்பேர்ப்பட்ட துரோகிகள் இந்தப்
போலிக் கம்யூனிஸ்டுகள்!

இவர்கள் மீண்டும் தற்போதைய தேர்தலில் போட்டி
இடுகிறார்கள்; வாக்குக் கேட்டு வருவார்கள்.
ஓட ஓட விரட்டி அடியுங்கள், மக்களே.
துரோகிகள் இந்த நாட்டில் நடமாட விடலாமா?
****************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக