ராஜீவ் காந்தியைக் கொன்றது யார்?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்கிறார்
சி.பி.ஐ புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த்திகேயன்.
2) உச்சநீதிமன்றமும் அப்படியே தீர்ப்பளித்து உள்ளது.
3) புலிகள்தான் என்கிறார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி.
இவற்றை எல்லாம் நாம் நிராகரிக்கலாம். மாறாக,
புலிகள் தரப்பு என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
1991 மே 21இல் ராஜீவ் கொலை நடந்தது. இதன் பிறகு,
15 ஆண்டுகள் கழித்து, 2006 ஜூன் மாதம் புலிகளின்
தத்துவ ஆசிரியர் ஆன்டன் பாலசிங்கம் NDTV
தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணல் அளித்தார்.
லண்டனில் இருந்து இந்த நேர்காணலை அவர்
அளித்தார்.
சர்வதேச அளவில் புலிகள் முற்றிலுமாகத் தனிமைப்
பட்டிருந்த நேரம் அது. நண்பர்களற்ற அமைப்பாகவும்
ஆதரவுக்கரம் நீட்ட எவரும் எந்த நாடும் முன்வராத
நிலையில் துவண்டு போன அமைப்பாகவும் புலிகள்
இருந்த காலக்கட்டம் அது.
இன்னொரு புறம், ராஜபக்சே அரசு, தன் முழு
ஆற்றலையும் திரட்டிக்கொண்டு இறுதிப்
போருக்குத் தயாராக இருந்த நேரம் அது. உண்மையில்
2006 ஜூலையில்தான் நான்காம் கட்ட (இறுதிக் கட்ட)
ஈழப்போர் தொடங்கியது.
நான்காம் கட்டப் போருக்கு ஒரு மாதம் முன்னால்,
2006 ஜூன் மாதம் ஆன்டன் பாலசிங்கம் இந்த
நேர்காணலை அளிக்கிறார். அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளின் ஆதரவை முற்றிலுமாகப் பெற
முடியவில்லை. உலகின் பல்வேறு நாடுகள்
புலிகள் அமைப்பைத் தடை செய்திருந்தன.
இந்தியா தலையிட்டால் அல்லாமல், புலிகளால்
தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்,
இந்தியாவின் ஆதரவைக் கோரி, ஒரு மாபெரும்
ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்த்தலைச்
செய்கிறார் பாலசிங்கம்.
ராஜீவ் கொலைக்குப்பின், புலிகளுக்கும்
இந்தியாவுக்குமான உறவு இணக்கம் காண
முடியாத அளவுக்கு சீர்குலைந்து கிடந்தது.
இதற்குக் காரணம் ராஜிவின் படுகொலையே.
எனவே சீர்கெட்ட உறவைச் சரி செய்யும்
நோக்கத்துடன், ராஜீவ் கொலைக்கு மன்னிப்புக்
கேட்டு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார்
பாலசிங்கம்.
உலகப் புகழ்பெற்ற அந்த நேர்காணலில்,
"ராஜீவ் கொலை ஒரு மாபெரும் வரலாற்றுச் சோகம்"
என்றும், "அதற்காகப் புலிகள் மிகவும்
வருந்துகின்றனர்" என்றும், "பழைய கசப்புணர்வுகளை
பின்னுக்குத் தள்ளி விட்டு, இனப் பிரச்சினையை
புதியதொரு கோணத்தில் பார்த்துத் தீர்வு காண
இந்தியா முன்வர வேண்டும்" என்றும் அந்த
நேர்காணலில் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
மிகத்தெளிவான திட்டவட்டமான ஒப்புதல்
வாக்குமூலம் இது. இது மட்டுமல்ல, இன்னும் நிறைய
ஒப்புதல்கள் (CONFESSIONS) புலிகளின் தரப்பில்
இருக்கின்றன. அவற்றை எல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) பாலசிங்கம் நேர்காணல் இத்துடன் இணைக்கப்
பட்டுள்ளது.
2) TamilNet இணையதளத்திலும் பாலசிங்கத்தின்
நேர்காணல் வெளியிடப் பட்டுள்ளது. TamilNet இணைய
தளம் யாருடையது என்று தெரிந்தவர்களால்
மட்டுமே, இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து
கொள்ள முடியும். அதுவும் இணைக்கப் பட்டுள்ளது.
**********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக