திங்கள், 6 ஜூன், 2016

போலி நாத்திகனை விட
மயிலாப்பூர் சவுண்டிப் பார்ப்பான்
மேலான நாத்திகன்! எப்படி?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் நாத்திகம் என்னும் கடவுள் மறுப்புக்
கொள்கை வளர்ந்து வருகிறது. நாத்திகர்களின்
எண்ணிக்கையும் பெருகி வருகிறது. மக்கள்
அறிவு பெற்று வருகின்றனர், விழிப்படைந்து
வருகின்றனர் என்பதன் அடையாளம் ஆகும் இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டையும் (1801-1900)
இன்றைய காலத்தையும் (2016) ஒப்பிட்டால்,
இடைப்பட்ட 115 ஆண்டுகளில், உலகம் முழுவதும்
நாத்திகமானது அசுரத்தனமான வளர்ச்சி
அடைந்திருப்பது புரிய வரும்.

இதற்குக் காரணங்கள் பிரதானமாக இரண்டு:
1) ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
ஏற்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி.
2) உலகளாவிய பிரம்மாண்டமான அறிவியல் வளர்ச்சி.

என்றாலும், தமிழ்நாட்டில் நாத்திகமும் வளரவில்லை.
நாத்திகர்களின் எண்ணிக்கையும் பெருகவில்லை.
மிக மிகக் குறைவான நாத்திகர்களே தமிழ்நாட்டில்
உள்ளனர். அறிவியல்வழி நாத்திகம் என்னும்
பொருள்முதல்வாதம் இங்கு ஒரு அற்ப அளவில்
கூட வளரவில்லை.

தமிழ்நாட்டில் தங்களை நாத்திகர்கள் என்று உரிமை
கோருவோர் பலரும் இந்துமத சீர்திருத்தவாதிகளே.
இந்துமதத்தில் உள்ள சடங்குகளை மட்டும் துண்டித்து
எடுத்து அவற்றை மட்டும் கண்டிப்பவர்கள் இவர்கள்.
கிறிஸ்துவ இசுலாமிய மதங்களைப் பற்றி இவர்கள்
துளியும் அக்கறை கொண்டது இல்லை.

சுருங்கக் கூறின், போலித் திராவிட, போலிப்
பெரியாரிய, போலிப் பகுத்தறிவுவாதிகளான இவர்கள்,
நாத்திகர்கள் என்று எவ்விதத்திலும் அழைக்கப்படத் தகுதியற்றவர்கள். இவர்களுக்குப் பொருள்முதல்வாதம்
(materialism) என்றால் என்னவென்றே தெரியாது.

இவர்களை விட, மயிலாப்பூர் சவுண்டிப் பார்ப்பானும்,
மாம்பலம் சவுண்டிப் பார்ப்பானும் சிறந்த
பொருள்முதல்வாதிகளாக  இருப்பார்களேயானால்
அதில்  வியப்பில்லை.

பொருள்முதல்வாதம் இன்று தோன்றிய தத்துவம்
அல்ல. காலந்தோறும் அறிவியலின் ஒளியில் அது
மென்மேலும் ஒளி நிறைந்து மின்னுகிறது. இருப்பினும்
தமிழ்நாட்டில் நிலவும் பெரியாரியம் போன்ற
தத்துவங்களில் பொருள்முதல்வாதத்தின் சுவடுகள்
எதுவும் இல்லை என்பது கண்கூடு. மலையாய்க்
குவிந்து கிடக்கும் பெரியாரின் எழுத்துக்களில்
பொருள்முதல்வாதம் பற்றி எதுவும் இல்லை.

இருப்பினும், இதை ஒரு குறையாகக் கருதாமல்,
அறிவியல் வழிப்பட்ட பொருள்முதல்வாதத்தை
மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுவது
ஒவ்வொரு நாத்திகரின் இன்றையக் கடமை ஆகும்.

ஏனெனில், தத்துவ அரங்கில் கடவுள் ஏற்புக்
கொள்கையான ஆத்திகத்தை முறியடிக்க
வல்லது பொருள்முதல்வாதம் மட்டுமே.
*************************************************************** 

   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக