ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை!
ஜெயலலிதா என்ன நினைக்கிறார்?
------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா மிகவும் நிம்மதியாக இருக்கிறார்.
இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்து
விட்டார், அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி
இல்லாமல்.
முன்னதாக 2014 நாடாளுமன்றத்தேர்தலிலும்
37 இடங்களைப் பெற்று வெற்றியின் உச்சத்தைத்
தொட்டார். வெற்றி அவருக்குத் தொடர்ச்சியாகக்
கிடைத்து வருகிறது.
இது உணர்த்துவது யாதெனில், ஜெயா என்ன
நினைக்கிறாரோ அதுதான் அவர் கட்சியின் கொள்கை.
அவரின் கொள்கை உருவாக்கத்தில் எந்த விதமான
புறச் சூழ்நிலையும் செல்வாக்குச் செலுத்த முடியாது.
இதன் பொருள் என்ன? மக்களின் கருத்தறிந்து
தமது கொள்கையையோ நடைமுறையையோ
உருவாக்க வேண்டிய தேவை எதுவும் ஜெயாவுக்குக்
கிடையாது.
ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை குறித்தெல்லாம்
அவருக்குத் துளியும் அக்கறை கிடையாது. அவரின்
சிந்தனை, உளப்பாங்கு, எண்ண ஓட்டம் ஆகியவற்றில்
இந்தக் கொலையாளிகளை விடுதலை செய்ய
வேண்டும் என்ற கருத்துக்கு அணுஅளவும் இடமில்லை.
முன்பு சில ஸ்டன்டுகளை மேற்கொண்டார்,
தேர்தலை மனதில் கொண்டு. இப்போதைய நிலையில்
அப்படி ஸ்டன்ட் அடிக்க வேண்டிய தேவை எதுவும்
அவருக்கு இல்லை.
மேலும், பந்து இப்போது மத்திய அரசிடம் இருக்கிறது,
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் வாயிலாக. மத்திய
பாஜக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை
செய்ய விரும்பவில்லை. இந்த வழக்கில் இவ்வாறு
விடுதலை செய்து விட்டால், மற்ற வழக்குகளுக்கு
அது ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்று
பாஜக அரசு அஞ்சுகிறது.
குறிப்பாக, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில்,
பயங்கரவாத வழக்குகளில், பாகிஸ்தான் நாட்டுப்
பிரஜைகள் பங்குகொண்ட வழக்குகளில், இவ்வாறு
விடுதலை செய்வது ஒரு மோசமான முன்னுதாரணத்தை
ஏற்படுத்தி விடும் என பாஜக அரசு அஞ்சுகிறது.
ஏனெனில், ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளிகள்
ஏழு பேரில், நளினி பேரறிவாளன் தவிர்த்த மீதி
ஐந்து குற்றவாளிகளும் இந்தியர்கள் அல்லர். அவர்கள்
இலங்கைப் பிரஜைகள். பேரறிவாளன் விடுதலையில்
இந்த விஷயம் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக
இருக்கிறது.
ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டவர்கள்
அனைவருமே இந்தியர்கள் என்றால், நளினி
பேரறிவாளான் ஆகியோர் எப்போதோ
விடுதலை செய்யப் பட்டிருக்க முடியும்.
ஆகவே, மேற்கூறிய காரணிகளால், பாஜக
அரசு இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய,
ஒருபோதும் முன்வராது. ஜெயலலிதாவும்
இதை ஒருபோதும் வற்புறுத்த மாட்டார்.
இன்றைய நிலையில், மத்திய அரசில் பாஜகவும்
மாநில அரசின் ஜெயலலிதாவும் உள்ள நிலையில்
முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம்
இவர்கள் இருவருக்கு மட்டுமே உண்டு.
இந்த இருவருக்கும் அறவே இதில் விருப்பம்
இல்லாத நிலையில், ராஜீவ் கொலையாளிகள்
முன்கூட்டியே விடுதலை செய்யப் படுவதற்கான
வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடுகிறது.
****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக