செவ்வாய், 7 ஜூன், 2016

இடியாப்பச் சிக்கலும்
பித்தலாட்டக் காரர்களின் கண்துடைப்புப் போராட்டமும்!
-------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
------------------------------------------------------------------------------------------------------
தங்களின் இள வயதில் ஆராயாமல் செய்துவிட்ட
ஒரு தவறுக்காக, கால் நூற்றாண்டு காலத்தைச்
சிறையில் கழித்து விட்ட, ராஜீவ் காந்தி
கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை
செய்வதற்கு ஜெயலலிதாவிடம் சிறிதளவு
மனிதாபிமானம் இருந்தால் போதும்.

அது அவரிடம் இருக்க வேண்டிய நேரத்தில்
இல்லாமல் போனதால், இன்று விஷயம் கைமீறிப்
போய்விட்டது. மாநில அரசின் கையிலிருந்து
மத்திய அரசின் கைக்குப் போய்விட்டது.
இடியாப்பச் சிக்கலாகவும் ஆகிவிட்டது.

ராஜீவ் கொலையாளிகள் ஏழுபேரின் முன்கூட்டிய
விடுதலையைக் கோரி, வேலூர் சிறை முன்பிருந்து
சென்னை கோட்டை வரை ஸ்கூட்டர், பைக்
வாகனங்களில் யாத்திரைப் போராட்டம்
நடத்த இருப்பதாக, திருமுருகன் காந்தியின்
மே 17 இயக்கம்  உள்ளிட்ட ஒரு சில ஈழ வணிக
அமைப்புகள் அறிவித்துள்ளன.

இது போராட்டம் அல்ல; பித்தலாட்டம்; கண்துடைப்பு!
இந்த வாகனப் போராட்டத்தால் மத்திய மாநில
அரசுகளுக்கு ஓர் அணு அளவுகூட நிர்ப்பந்தம்
ஏற்படுத்த முடியாது.

இதற்குப் பதிலாக, இந்த ஈழ வணிக அமைப்புகளுக்கு
ஏழு பேரின் விடுதலையில் மெய்யான அக்கறை
இருக்குமேயானால், தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும்
சங்கிலித் தொடர் உண்ணாவிரதத்தை நடத்தலாம்.
தலைவர்கள் திருமுருகன் காந்தி போன்றோர்
சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று
அறிவிக்கலாம். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த
போராட்டங்களை அறிவித்து நடத்தலாம்.

ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்
தமிழ் அப்பாவிகளிடம் இருந்து பணம் பறிக்கும்
ஒரே நோக்கத்திலேயே இந்தக் கண்துடைப்புப்
போராட்டத்தை ஈழ வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
இது பித்தலாட்டமும் மோசடியும் ஆகும்.

எந்தவொரு போராட்டமும் அரசுக்கு நிர்ப்பந்தம்
ஏற்படுத்தினால் மட்டுமே அரசு திரும்பிப்
பார்க்கும். கோரிக்கை கவனம் பெறும். இது
அரசியலில் பால பாடம்.

அரசை நிர்ப்பந்திக்க இயலாத கண்துடைப்புப்
போராட்டங்களால், ஏழு பேருக்கு எவ்விதமான
நன்மையும் விளையாது என்பது நிதர்சனம்.
**************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக