ராஜீவ் காந்தி கொலையாளிகள்
ஏழுபேரின் விடுதலைக்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை!
----------------------------------------------------------------------------------------------
பேரறிவாளன், நளினி உட்பட ராஜிவ்காந்தி
படுகொலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்
ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து
வருகிறார்கள்.
இவர்கள் விடுதலை செய்யப் படலாம் என்ற
எண்ணமும் நம்பிக்கையும் அவ்வப்போது
மழைக்கால ஈசலாய் வந்து மறைகிறது.
இவர்களின் விடுதலையைப் பொருத்தமட்டில்
சட்டப்படியான முயற்சிகள் பலன் தருவதற்கான
வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஆயுள் தண்டனை
என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதான்
என்றுதான் சட்டம் சொல்கிறது. நீதிமன்றத்
தீர்ப்புகளும் அதற்கான விளக்கங்களும்
(interpretations) இதைத்தான் சொல்கின்றன.
எனவே விடுதலை என்பது மக்களின் கையில்
மட்டுமே உள்ளது. மத்திய மாநில அரசை
நிர்ப்பந்திக்க வல்ல வலிமையான மக்கள்
போராட்டங்களின் மூலமாக மட்டுமே இவர்களை
விடுதலை செய்ய முடியும்.
ஆனால் தமிழக மக்களிடம் இவர்களின் விடுதலைக்கு
ஆதரவான மனநிலை தொடக்கம் முதலே இல்லை.
இப்போதும் இல்லை. எட்டுக்கோடித் தமிழர்களும்
ராஜிவ்காந்தி மீது பரிவு உடையவர்களாகவே
இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
ராஜிவின் படுகொலை நியாயமற்றது என்று தமிழர்கள்
கருதுகிறார்கள். ராஜீவ் படுகொலை செய்யப்பட
வேண்டும் என்பது இந்தத் தமிழ் மண்ணின்
கோரிக்கையோ அல்லது மக்களின் கோரிக்கையோ
அல்ல. ராஜீவ் வெறுப்பு (hatred towards Rajiv) என்பது
இந்தத் தமிழ் மண்ணில் தோன்றவே இல்லை.
தோன்றுவதற்கான எந்தக் காரணியும் இல்லை.
எனவே ராஜீவ் கொலையாளிகள் மீது எட்டுக்
கோடித் தமிழர்களுக்கும் துளிப்பரிவுகூட இல்லை.
மாறாக, ராஜீவ் தமிழ் மண்ணில் படுகொலை
செய்யப்பட்டதை தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லை.
இதுதான் தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியின்
குரல். இந்த உளவியலைச் சற்றும் புரிந்து கொள்ளாமல்
மேற்கொள்ளப்படும் எந்தச் செயல்பாடும் விழலுக்கு
இறைத்த நீராகவே முடியும்.
ராஜிவ்காந்தியைக் கொலை செய்தது நியாயம்தான்
என்று சொல்லக்கூடியவர்கள் தமிழ்நாட்டில்
எத்தனை பேர்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடுங்கள். தேடினால் மேலே சொல்லப்பட்டது சரியானது என்று புரியும்.
பின்குறிப்பு: குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களின் கவனத்திற்கு: இந்தக் கட்டுரை
ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து எழுதப்
பட்டதல்ல. உண்மை நிலையை உணர்த்துவது
மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக