வியாழன், 2 ஜூன், 2016

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்!
சுத்தீஷின் கொழுந்தியாளை வேட்பாளராக நிறுத்த
வைகோ ஆலோசனை! முத்தரசன் ஆதரவு!
--------------------------------------------------------------------------------------------------
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைப் பொறுத்தமட்டில்,
"நாங்க யாரும் நிக்க மாட்டோம், நீங்கதான் நிக்கணும்"
என்று கறாராகச் சொல்லி விட்டார் கேப்டனிடம் வைகோ.

கேப்டனோ மீண்டும் டெப்பாசிட் இழக்க அஞ்சுகிறார்.
எனவே தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் வைகோ
விடுவதாக இல்லை.

இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்தின் மச்சான்
சுத்தீஷை அவரது இல்லத்த்க்குச் சென்று சந்தித்த
வைகோ, சுத்தீஷின் கொழுந்தியாளை வேட்பாளராக
நிறுத்தச் சொல்லி ஆலோசனை கூறியுள்ளாராம்.

"உங்கள் கொழுந்தியாளுக்கு நாங்கள் எல்லோரும்
சேர்ந்து டெப்பாசிட் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்"
என்று உறுதி கூறியுள்ளாராம் வைகோ.

வைகோவின் இந்த யோசனை புரட்சிகரமானது
என்று பாராட்டியுள்ளார் முத்தரசன்.

சுத்தீஷின் கொழுந்தியாளை நிறுத்துவதன் மூலம்
குடும்ப அரசியலை ஒழிக்க முடியும் என்று
புரட்சிகரக் கருத்தைத் தெரிவித்துள்ளார்
மார்க்சிஸ்ட் ஜி ராமகிருஷ்ணன்.

எனவே சுத்தீஷின் கொழுந்தியாள் வேட்பாளராக
நிறுத்தப் படுவது கிட்டத்தட்ட உறுதியாகி
விட்டது என்றே கருதுகிறாராம் வைகோ.
************************************************************************     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக