வியாழன், 2 ஜூன், 2016

மன்னிப்புக் கேட்கிறார் விஜயகாந்த்!
--------------------------------------------------------------------
தேமுதிக கிச்சன் காபினெட் எடுத்த முடிவின்படி
விரைவில் அறிவாயலயம் சென்று கலைஞரிடம்
மன்னிப்புக் கேட்க உள்ளார் விஜயகாந்த்.

திமுக கூட்டணியில் இடம் பெற விரும்புகிறார்.
மன்னிக்கும் பெருந்தன்மை கொண்ட கலைஞர்
விஜயகாந்தை மன்னித்து விடுவார் என்றே
கருதுகிறாராம் பிரேமலதா.

கலைஞர் மன்னிப்பார், சரி. கோடிக்கணக்கான
திமுக தொண்டர்கள் விஜயகாந்த மன்னிப்பார்களா?
*********************************************************************


மீண்டும் டெப்பாசிட் இழக்கிறார் விஜயகாந்த்!
------------------------------------------------------------------------------------
வரவிருக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்
விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று வைகோ
வலியுறுத்தி வருகிறாராம்.

விஜயகாந்த் போட்டியிட்டால் டெப்பாசிட் இழப்பு உறுதி
என்பதுதான் கள நிலவரம்.

வைகோவின் பேச்சைக் கேட்டு, மீண்டும் டெப்பாசிட்
இழக்கத் தயார் ஆகிவிட்டாராம் விஜயகாந்த்.

தேமுதிகவை வேரோடும் வேரடி மண்ணோடும்
அழித்தால்தான் வைகோ திருப்தி அடைவார் போலும்.
**********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக