வெள்ளி, 3 ஜூன், 2016

தத்துவமும் அறிவியலும் எதிரெதிர் துருவங்களாக
என்றுமே இருந்ததில்லை இன்று உட்பட. மாறாக
அறிவியலின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதாகவே
தத்துவம் இருந்து வந்தது. அரிஸ்டாட்டில் காலத்தில்,
அவரே விஞ்ஞானியாகவும் அவரே தத்துவஞானியாகவும்
இருந்தார். நியூட்டனின் இயற்பியல் வரை (Newtonian physics)
தத்துவத்தில் சிக்கல் எதுவும் இல்லை. ஏனெனில்
நியூட்டனின்இயற்பியலை தத்துவம் முழுவதுமாக
உள்வாங்கிக் கொண்டது.
**
அதன் பிறகு ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு,
பிளாங்கின் குவாண்டம் கோட்பாடு ஆகியவை
அறிவியலில் உருவாயின. இதைத் தொடர்ந்து
அறிவியல் அசுரத்தனமான பாய்ச்சலில் சென்றது.
இந்த வளர்ச்சியோடு ஒத்திசைவாக வளர்வதற்கு
தத்துவத்தால் இயலவில்லை. எனவே தத்துவம்
பின்தங்கி விட்டது.
**
அறிவியலுக்கும் தத்துவத்துக்கும் ஒரு போர் நடந்து,
அந்தப் போரில் அறிவியலானது தத்துவத்தைக் கொன்று
விடவில்லை. மாறாக, சமகால அறிவியலின் வளர்ச்சியை
உள்வாங்க இயலாமல் தத்துவம் பின்தங்கி விட்டது.
**
மார்க்சும் எங்கல்சும் நியூட்டனின் இயற்பியலை
முழுவதுமாக உள்வாங்கி, பொருள்முதல்வாதத்தை
(materialism) செழுமைப் படுத்தினர். ஆனால் அடுத்தடுத்த
வளர்ச்சியான குவாண்டம் இயற்பியலை உள்வாங்கி
பொருள்முதல்வாதம் செழுமைப் படுத்தப் படவில்லை.
எனவே தத்துவம் இயல்பாகவே பின்தங்கி விட்டது.
**
இனி விஞ்ஞானிகளே தத்துவஞானிகள் ஆக முடியும்
என்ற நிலை தற்போது உள்ளது. அவ்வாறு
இயற்பியலாளர்கள் தத்துவஞானிகளாக மாறும்போது
மட்டுமே, தத்துவம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள
முடியும்.
**
தத்துவஞானத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஒரு
நெருக்கடியை (crisis) மட்டுமே இக்கட்டுரை சுட்டுகிறது.
விஞ்ஞானிகள் தத்துவத்தில் கவனம் செலுத்தினால்
மட்டுமே தத்துவம் வளர முடியும். அவ்வாறு
இல்லாதபோது தத்துவம் தேங்கிக் கிடக்கும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக