புதன், 8 ஜூன், 2016

தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகள்
கோகிலவாணி காயத்ரி ஹேமலதாவைக் கொன்ற
கிரிமினல்களை விடுதலை செய்யக்கோரி
உண்ணாவிரதம் நடத்த சில பினாமிகள் முயற்சி!
--------------------------------------------------------------------------------------------
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில்
ஜெயலலிதா தண்டிக்கப் பட்டவுடன் தமிழகத்தை
வன்முறை வெறியாட்டக் காலமாக மாற்றினர்
அதிமுகவினர். கோவை வேளாண் பல்கலை
மாணவிகள் மூவர் அவர்கள் பயணம் செய்த
பேருந்தை அதிமுகவினர் எரித்தால் தீயில்
கருகி மாண்டனர். இந்தத் துயரம் நடந்த நாள்
பெப்ரவரி 2, 2000.

இந்த வழக்கில் மூவருக்கு மரண தண்டனையும்
மீதி 25 பேருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அண்மையில்,
(2016 மார்ச் மாதம்) மரண தண்டனையை
ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மற்ற 25 பேரும் தண்டனை முடிந்து விடுதலையாகி
விட்டனர். முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன்
ஆகிய மூன்று கிரிமினல்கள் மட்டுமே சிறையில்
இருந்து வருகின்றனர்.

இந்த மூன்று கிரிமினல்களும் 2000 முதல் தற்போது
வரை, 16 ஆண்டுகளைச் சிறையில் கழித்து
விட்டனர். ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள்
என்ற பொதுக்கருத்தின்படி, இவர்களை உடனடியாக
விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
எழுப்பப்பட்டு வருகிறது. இது மாநில அரசு
தொடர்ந்த வழக்கு என்பதால், குற்றவாளிகளை
விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு
இருக்கிறது.

இவர்களை விடுதலை செய்யச் சொல்லி, சில
பினாமி அமைப்புகளைத் தூண்டி விட்டு,
தமிழகம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை
நடத்த சுயநல சக்திகள் திட்டமிட்டுள்ளனர்.
************************************************************
  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக