ராஜீவ் கொலையில் கருணாநிதிக்குப் பங்கு உண்டு!
கருணாநிதியைக் கைது செய்ய வேண்டும் என்று
வாஜ்பாய் அரசின் அமைச்சர்கள் போர்க்கொடி!
-------------------------------------------------------------------------------------------
வாஜ்பாய் இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப்
பதவியேற்ற காலம் அது.(மார்ச் 1998-99). ராஜீவ் கொலை
குறித்த ஜெயின்கமிஷன் அறிக்கை வெளியாகி
இருந்தது. அந்த அறிக்கையில் திமுக மீது குற்றம்
சுமத்தப்பட்டு இருந்தது. அதன் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி வாஜ்பாய் அரசுக்கு நாடாளுமன்றத்திலும்
அதற்கு வெளியேயும் கடும் நிர்ப்பந்தம் இருந்தது.
எனவே ஜெயின் கமிஷன் அறிக்கை மீதான நடவடிக்கை
அறிக்கையை (ATR) வாஜ்பாய் அரசு வெளியிட்டது.
அதில் திமுக மீதோ கலைஞர் மீதோ நடவடிக்கை
எடுப்பது குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை.
இதனால் வாஜ்பாய் அரசு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.
எதிர்க்கட்சிகளின் கண்டனக் கணைகளை அன்றைய
உள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில்
எதிர்கொண்டார்.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக, வாஜ்பாய் அரசின்
அமைச்சர்களே கலைஞரைக் கைது செய்ய வேண்டும்
என்றும் திமுகவைத் தடை செய்ய வேண்டும்
என்றும் போர்க்கொடி தூக்கினர். இதனால் வாஜ்பாய்
கடும் நெருக்கடியில் சிக்கித் தத்தளித்தார்.
அவ்வாறு போர்க்கொடி உயர்த்திய மூன்று அமைச்சர்கள்
யார் யார்? 1) ரங்கராஜன் குமாரமங்கலம் 2) தம்பித்துரை
(அதிமுக) 3) வாழப்பாடி கே ராமமூர்த்தி.
பற்றாக்குறைக்கு இன்னொரு அமைச்சரான ராம்
ஜெத்மலானியும் ஜெயின் கமிஷன் அறிக்கையின்படி,
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போல, இந்தத்
தடைகளை எல்லாம் கடந்து நின்றது திமுக என்பது வரலாறு.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக