வியாழன், 9 ஜூன், 2016

(RDX-7) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விவரங்கள்!
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!
இல்லையேல் பொய்யர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்!
----------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
1) 1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி
படுகொலை செய்யப்பட்டார்.

2) மொத்தம் 41 பேர் மீது குற்றப் பத்திரிக்கை
தாக்கல் செய்யப்பட்டது.

3) இதில் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா
ஆகிய மூவரும் தலைமறைவு என்றும்

4) 12 பேர் இறந்து விட்டனர் என்றும் (மனித வெடிகுண்டுப்
பெண் தாணு உட்பட) குற்றப் பத்திரிக்கை கூறியது.

5) எனவே 41 பேரில் 15 பேர் போக மீதி 26 பேர் மீது
விசாரணை நடந்தது.

6) வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றத்தின்
நீதியரசர் நவநீதம் 26 பேருக்கும் மரண தண்டனை
விதித்து 1997 ஜனவரி 28இல் தீர்ப்பளித்தார்.

7) உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

8) தண்டிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை அவர்கள் செய்த
குற்றத்திற்கு இதுவரை அனுபவித்த தண்டனை
போதுமானது என்று கூறி உச்சநீதி மன்றம் விடுதலை
செய்தது. மீதி 7 பேரில் நாலு பேருக்கு (நளினி, முருகன்,
சாந்தன், பேரறிவாளன்) மரண தண்டனை விதித்தது
உச்ச நீதிமன்றம்.

9) மற்ற மூவருக்கும் (ராபர்ட் பயாஸ், ஜெயகுமார்,
ரவிச்சந்திரன்) ஆயுள் தண்டனை விதித்தது உச்ச
நீதி மன்றம்.

10) நீதியரசர்கள்  ஜே தாமஸ், ஜே. வாத்வா, சையது ஷா
முகம்மது காத்ரி ஆகிய மூன்று நீதியரசர்கள்
அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

11) நாலு பேரின் மரண தண்டனையும் பின்னர்
ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.

12) மேலும் தலைமறைவாக இருந்த மூன்று பேரும்
(பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ) இறந்து
விட்டபடியால், இந்த வழக்கு முடித்து வைக்கப்
பட்டது.

13) மொத்தத்தில், குற்றப் பத்திரிக்கை வழங்கப் பட்ட
41 பேரில், 15 பேர் இறந்து விட்டனர்; 19 பேர் விடுதலை
ஆகி விட்டனர். 7 பேர் மட்டுமே ஆயுள் கைதிகளாக
சிறையில் இருக்கின்றனர்.

14) இந்த 7 பேரில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு காரணமாக 
பேரறிவாளன் இம்மாதம் (மே 2022) விடுதலை 
ஆகி விட்டார். மீதி 6 பேர் சிறையில் உள்ளனர்.
. ***********************************************
பின்குறிப்பு:
உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து க்கொள்ள 
வேண்டும், அறியாமையுடன் இருந்தால் பொய்யர்களும் 
பித்தலாட்டப் பேர்வழிகளுக்கு உங்களை ஏமாற்றிக் 
கொண்டே இருப்பார்கள்.

நான் அடுத்து எழுதவிர்க்கும் சில முக்கியமான 
கட்டுரைகளை புரிந்து கொள்ளவேண்டுமெனில்,
வாசகர்களுக்கு ராஜிவ் கொலை வழக்கு, தீர்ப்பு 
பற்றிய முழு உண்மைகளும் தெரிந்திருக்க 
வேண்டும். அதனால்தான் கை வலிக்க வலிக்க 
எழுதுகிறேன். இதன் முக்கியத்துவத்தை 
உணருங்கள். இதையெல்லாம் படியுங்கள். 
----------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக