வெள்ளி, 29 ஜூன், 2018

பெரியார் பெரியாராக கயமை 000000000000000
---------------------------------------------------------------------------
என்ன சாதி...?
முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.கண்ணன் அவர்களின் வாக்குமூலம்.
1949-ஆம் ஆண்டு.
அண்ணா அவர்களின் ஆலோசனைப்படி விடுதலையில் சேர , மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகம் சென்று பெரியாரைச் சந்தித்தேன்.
அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வியே, ” நீ என்ன சாதி?” என்பதுதான்.
”எனக்கு பெரும் அதிர்ச்சி”.
”முதலியார்” என்றேன்.
அவர் உடனே, ”கறி திங்கற முதலியாரா? திங்காத முதலியாரா?” என்றார்.
மீண்டும் எனக்கு அதிர்ச்சி. நான் எனது சாதியைச் சொன்னேன்.
பக்கத்திலிருந்த மணியம்மையாரிடம் ”உங்க ஆளு” என்பதுபோல கண்ணசைத்துக் காட்டினார்.
பிறகு சாதிப்பற்றிக் கேட்டதற்கு பெரியார் விளக்கமளித்தார்.
” நான் ஏன் சாதிக் கேட்டேன் தெரியுமா? மற்றவர்களுக்கு விடுதலை என்பது சாதாரண பத்திரிகையாகத் தெரியலாம். என்னுடைய எண்ணத்தின் வாகனம் அது. உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடு இருந்தாலதான் வேலை செய்ய முடியும்.”
என்று சொன்னவர் மேலும்...
“எல்லா சாதிக்காரனுக்கும் அந்த உணர்வு வராது” என்றும்
“ஆகவே விடுதலையில் பணியாற்றுவதற்கு சாதிப்பின்னணியையும் நான் பார்ப்பதுண்டு” என்றார்.
இதை அப்படியே நான் அண்ணாவிடம் சொன்னபோது, ”அவர்தான் பெரியார்” என்றார் அண்ணா.
(ஆதாரம்: த சண்டே இந்தியன். 15...21 செப்டம்பர் 2008. இதழ்.) இந்த ஆதார இதழில் அன்று முதல்வராக இருந்த மு.கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் முதல் கி.வீரமணிவரை கட்டுரை எழுதியுள்ளனர். ஜே.வி.கண்ணன் அவர்களின் இந்தக் கட்டுரையும் அதே இதழி்ல்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக