ராஜிவ் படுகொலை என்பது சிஐஏயின் சதியே!
எழுவர் விடுதலைக்கு முட்டுக் கட்டையாக
இருந்த சந்திராசாமி மண்டையைப் போட்டு
விட்டதால், தற்போது வேறு பெரிய தடை இல்லை!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
இதுநாள் வரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே
மிகவும் சக்தி வாய்ந்தவர் (the most powerful) யார்?
குட்டி முதலாளித்துவம் இதற்கு தான்தோன்றித்
தனமான விடைகளைக் கூறும். ஆனால் சர்வதேச
அரசியலைக் கூர்ந்து நோக்கும் ராஜதந்திரிகள்,
சக்தி மிக்க ஒரே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திதான்
என்று அடித்துக் கூறுகிறார்கள். இது சரியே.
அண்டை நாடான இலங்கையின் உள்விவகாரத்தில்
தலையிட்டு, ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம்
போட்டு, அந்த நிறைவேற்றிட IPKF என்னும் இந்திய
ராணுவத்தை அடுத்த நாட்டுக்குள் அனுப்பியதை
அதிகாரத்தின் மிகப்பெரும் வெளிப்பாடாக
சர்வதேச ராஜதந்திரிகள் கணிக்கிறார்கள்.
இன்றைக்கு யோசித்துப் பாருங்கள். எந்த நாடாவது
இன்னொரு நாட்டுக்கு தன்னுடைய ராணுவத்தை
அனுப்ப முடியுமா? அந்த நாட்டின் உள்விவகாரத்தில்
தலையிட்டு ஒரு தீர்வைத் திணிக்க முடியுமா?
அந்த நாட்டு மக்களை அடக்க நம் நாட்டு
ராணுவத்தை அனுப்ப முடியுமா? IPKFஐ
அனுப்பியது உண்மையில் ஒரு ஆக்கிரமிப்பு அல்லவா?
மேலும் ராஜீவுக்கு நாடாளுமன்றத்தில் அசைக்க
முடியாத பெரும்பான்மை வேறு! 425 எம்.பி.க்கள்!
ஆக, உலகின் சக்தி மிக்க பிரதமர்களில் ஒருவரான
ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்வது என்ற
முடிவை விடுதலைப் புலிகள் எடுத்தனர் என்றால்,
அது புலிகளோடு முடிந்து போகிற விஷயம் அல்ல.
பிரபாகரனிடம் ஆரம்பித்து சிவராசனோடு
முடிந்து போகிற விஷயம் அல்ல.
கொல்லுவது என்று முடிவு எடுத்த புலிகள்
எப்படிக் கொல்லுவது என்ற முடிவையும் சேர்த்தே
எடுத்தனர். மனித வெடிகுண்டு மூலம் கொல்லுவது
என்பதே அந்த முடிவு.
இந்த முடிவு புலிகளைத் தாண்டி வெளியே செல்லாது
என்று எவரேனும் கருதினால், அவர்கள்
சர்வதேச உளவு நிறுவனங்களைப் பற்றி
எள்முனையேனும் அறிந்திருக்கவில்லை
என்பதே நிஜம் .அத்தோடு ராஜீவைக் கொல்லுவது
என்பது பிற உளவு நிறுவனங்களுக்குத் தெரியாமல்
ரகசியமாகச் செய்ய முடிந்த விஷயமும் அல்ல.
அமெரிக்காவின் சிஐஏ, ரஷ்யாவின் கேஜிபி,
இஸ்ரேலின் மோஸாத், பாலஸ்தீன PLOவின் உளவு
நிறுவனம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, இங்கிலாந்தின்
எஸ்ஐஎஸ் ஆகிய உளவு நிறுவனங்கள் இந்தியா
பற்றி மிகவும் அக்கறை கொண்டவை. மேலும்
பல நாடுகளின் கூட்டு உளவு அமைப்புகளும்
(Joint Intelligence agencies) உள்ளன. இவை நாடுகளுக்கு
இடையிலான மற்றும் எல்லா நாடுகளுக்கும்
பொதுவான உளவுத் தகவல்களைப் பரிமாறிக்
கொள்வது உண்டு.
ஆக இத்தகைய வலுவான மற்றும் ஒன்றிணைந்த
சர்வதேச உளவு வலைப்பின்னலுக்குத் தெரியாமல்
புலிகளால் ராஜிவ் படுகொலையை நிறைவேற்ற
இயலாது.
தேங்காயை உடைப்பது போல் சொல்வதானால்,
அமெரிக்க சிஐஏவுக்குத் தெரியாமல், புலிகளால்
ராஜீவைக் கொல்ல முடியாது.
சிஐஏவுக்கு கொலைச்சதி தெரிந்து விட்ட பிறகு
சிஐஏ என்ன முடிவு எடுக்கும்?
1. சிஐஏ அதை ஏற்றுக் கொண்டால் அதை அனுமதிக்கும்
2. சிஐஏ அதை ஏற்கவில்லை என்றால் முறியடிக்கும்.
3. சிஐஏ ஏற்றுக் கொண்டாலும், கொலைச்சதியை
நிறைவேற்றும் ஆற்றல் புலிகளுக்கு இருக்கிறதா
என்று உறுதி செய்யும்.
ராஜிவ் கொலை விஷயத்தில், புலிகளின் முடிவை
சிஐஏ ஏற்று அனுமதித்தது. புலிகளால் இதை
நிறைவேற்ற முடியும் என்பதில் சிஐஏ நம்பிக்கை
கொண்டிருந்தது. மேலும் ஒரு கொலைச்சதி
பற்றி சிஐஏ அறிய நேர்ந்து, சிஐஏ அதற்கு
அங்கீகாரமும் கொடுத்து விட்டால், அதன் பிறகு
அச்சதி முழுவதும் சிஐஏயின் கண்காணிப்புக்கு
(MONITORING) வந்துவிடும். ஆக ராஜிவ் கொலைச்சதி
சிஐஏயின் சதியாக பரிணாமம் அடைந்து விட்டது.
அமெரிக்கா ஏன் ராஜீவின் கொலையைத்
தடுக்கவில்லை? புலிகளின் கொலைச்சதிக்கு
ஏன் கிரீன் சிக்னல் கொடுத்தது? இதற்கான
விடையை இந்தக் கட்டுரையில் அடைக்க
முடியாது. அதைத் தனியாகப் பார்ப்போம்.
PLO தலைவர் யாசர் அராபத்துக்கு ராஜிவ் கொலை
பற்றிய துப்பு கிடைக்கிறது. அதை உடனடியாக
இந்தியாவுக்குத் தெரியப் படுத்துகிறார்.
புலிகள் அல்லது காலிஸ்தான் தீவிரவாதிகள்
ராஜீவைக் கொல்ல முயற்சி செய்கின்றனர்
என்பதே யாசர் அராபத் அனுப்பிய செய்தியாகும்.
ஆக, ராஜிவ் கொலையை இரண்டு பகுதிகளாகப்
பிரித்துக் கொள்ள வேண்டும்.
1. சதிப்பகுதி (CONSPIRACY PART)
2. நிறைவேற்றப் பகுதி ( EXECUTION PART)
இவ்விரண்டில், ராஜிவ் கொலைச்சதி சர்வதேசச்
சதியாக, ஏகாதிபத்தியத்தின் நேரடிக்
கண்காணிப்பில் வந்து விட்டது.
நிறைவேற்றப் பகுதியானது சிவராசன்
தலைமையிலான குழுவினரிடம் (நளினி,
தாணு, சுபா, பேரறிவாளன் முதலியோர்)
வந்து விட்டது.
ராஜிவ் கொலை என்பது உணர்ச்சிவசப்பட்டு நடந்து
விட்ட ஒரு சம்பவம் அல்ல. வரப்புத் தகராறில்
பங்காளிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்ட
போது, உணர்ச்சி வேகத்தில் கண நேரத்தில்
நடந்து முடிந்து போன ஒரு நிகழ்வு அல்ல. இது
ஒரு மாபெரும் ஏகாதிபத்தியச் சதி.

சிஐஏயின் கண்காணிப்பு சந்திரா சாமி மூலமாக
சிவராசன் மீது நேரடியாகச் செலுத்தப் பட்டது.
ஏகாதிபத்தியத்தின் மிகக் கொடிய சதிச்செயலான
ராஜிவ் படுகொலை, ராஜிவ் வழக்கின்
குற்றவாளிகளான A1 முதல் A26 வரையிலான
குற்றவாளிகளால் திட்டமிட்டு வெற்றிகரமாக
நிறைவேற்றப் பட்டது. இந்த பயங்கரவாதச்
செயலில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர்.
சிஐஏவின் இந்த சதிச்செயலை நிறைவேற்றிய
அத்தனை குற்றவாளிகளும் ஏகாதிபத்தியத்தின்
கைக்கூலிகளே. இவர்கள் யாரும் அப்பாவிகளோ
தமிழ் தேசியப் பற்றாளர்களோ அல்லர். பணம்,
காசு, வசதி, சௌகரியம் என்று தற்காலிக
சுகபோகங்களுக்காக தங்கள் வாழ்க்கையை
சீரழித்துக் கொண்டவர்கள் இவர்கள்.
சிவராசன் கரன்சி நோட்டால் அடித்து
ஒவ்வொருவரையும் தன் வசப் படுத்தினான்.
மிகக் கொடூரமான ஒரு சிஐஏயின் சதியில்,
அந்தச் சதியை நிறைவேற்றிக் கொடுத்தவர்கள்
இவர்கள்.
என்றாலும், இந்த 26 பேரில் 19 பேர் ஏற்கனவே
விடுதலை ஆகி விட்டனர்.மீதி 7 பேர் மட்டுமே
சிறையில் உள்ளனர். அவர்களையும் உடனடியாக
விடுதலை செய்வது நல்லது.
இது நாள் வரை சந்திராசாமி இவர்களின்,
இந்த எழுவரின் விடுதலைக்குத் தடையாக
இருந்தார். அவரும் கடந்த ஆண்டு மண்டையைப்
போட்டு விட்டார்.எனவே இவர்களை விடுவிப்பதில்
தற்போது எந்த முட்டுக் கட்டையும் இல்லை.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக