ரஜினி அரசியலும் ரஞ்சித் அரசியலும்தான் பிரச்சனை. ரஜினியை ஏன் எதிர்க்கிறோம் கட்டணக் கொள்ளை, தனிக்கட்சி பெயரில் பிஜேபி ஆதரவு வலதுசாரி அரசியல்தான் ரஜினி அரசியல்
இந்துத்துவா – பார்ப்பனீய ஆதரவு பிற்போக்கு அரசியல் அது வெளிப்டையானது அதனால் எல்லோரும் எதிர்க்கிறார்கள்
காலா படம் ரஞ்சித் படம் என்றும் இல்லையில்லை ரஜினி படமென்றும் இரண்டு பிரிவுகள் மோதிக் கொண்டிருக்கின்றன.
ரஞ்சித் எடுத்து 4படம் அதில் 2ரஜினி படம்.அதற்குள் ரஞ்சித் படம் என்று சொல்வுமளவுக்கு பார்முலா உருவாகிவிட்டதா? அவர்கள் ரஞ்சித் படம் என எதை வைத்துச் சொல்கிறார்கள் தனித்துவமான மேக்கிங் ஸ்டைலை வைத்தா? இல்லை.
ரஞ்சித்தின் ஆங்காங்கே பேசும் “தலித் அரசியலை “வைத்துதான் ரஞ்சித் படமென சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
முதலில் தலித் அரசியலைப் பார்ப்போம். தலித் அரசியலே 1990க்குப் பிறகு ஏகாதிபத்தியத்தால் கிறிஸ்தவ மிசினரிகளால் பின்நவினத்துவ தத்துவ அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலே தலித் அரசியல்
அதாவது ரஜினி அரசியல் வெளிப்படையான RSS வலதுசாரி அரசியல் என்றால் தலித் அரசியலும் மறைமுகமாக வலதுசாரி அரசியல்தான் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் மோசமான அரசியல்தான்.
ரஞ்சித்தை ஆதரிப்போர் யார்?
தமிழகத்தில் SC என்றால் 75ஜாதிகள் இருக்கிறது.இந்தியா உருவாவதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் SC இடஒதுக்கீடு இருக்கிறது.அதன் மூலம் 75ஜாதிகளில் பறையர்கள் மட்டும் சற்று முன்னேறி இருக்கிறார்கள் பலர் கிறிஸ்துவ பறையராக இருந்தாலும் சான்றிதழ் படி இடஒதுக்கீட்டுக்காக இந்து மத பட்டியலில் இருப்பவர்கள் அதிகம்
பறையர்களில் 2தலைமுறையாக அரசு வேலையில் இருப்பவர்கள் நல்ல மேட்டுக்குடியாக அரைப் பார்ப்பனர்களாக உருவாகியிருக்கிறார்கள் இவர்களில் 1990க்குப் பிறகு உருவான அரசியலற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது
கிறிஸ்துவ பறையர்களும் பலர் நல்ல முன்னேற்றமடைந்துள்ளனர்.இவர்களின் பலர் கிறிஸ்தவ மிசினரி NGOகளோடு தொடர்பிலிருந்து தொடர்ந்து NGOஅரசியலைப் பேசு வருபவர்கள் மிக ஆபத்தானவர்கள்
எல்லா போராட்டத்திலும் ஊடுருவி போராட்டம் வர்க்கப் போராட்டமாக கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டமாக மாறவிடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள்
இப்படி பட்ட கூட்டத்தை உருவாக்கும் இடம்தான் லயோலா கல்லூரி, தமிழ்நாடு இறையியல் கல்லூரி, தலித் ஆய்வு மையம் போன்ற NGO களங்கள்
முன்னேறிய பறையர்கள் கிருஸ்துவ பறையர்கள் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருக்கும் மாவட்டங்களிலும் அதிகம் இவர்களுக்கும் கூலி விவசாயம் சார்ந்த கிராமப்புற தாழ்த்தப்பட்டோருக்கும் - பறையருக்கும் எந்த சம்மந்தமுமில்லை
இவர்கள் பேசுவதெல்லாம் புரட்சி, முற்போக்குப் போல தோற்றமளித்தாலும் இவர்களது அரசியல் NGO அரசியலே . இவர்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பதைப் பார்த்து பலர் இதுதான் முற்போக்கு அரசியலோ என மயங்கிவிடுகின்றனர்
சென்னையைச் சுற்றி இருக்கும் எலைட் மேட்டுகுடி வாழ்க்கை வாழும் இந்தக் கூட்டம் வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே ஆளும் வர்க்க அடிமைகள்தான்
கிராமங்களான தஞ்சை சிவக்கும் போது கூட இவர்கள் சிவப்புநாடாவுக்குள் பதுங்கிக் கிடப்பார்கள் இவர்களது இப்போதைய தலித் அரசியல் போர்வை என்பது மக்களைக் கெடுக்கும் மக்களை பிரிக்கும் ஜாதியை வளர்க்கும் ஆபத்தான அரசியலே
தலித் அரசியல் 25ஆண்டுகளாக இருக்கிறது தோற்று நாறிப் போய்விட்டது இப்போது புது பிசினசாக புத்தர், பௌத்தமதம், பா.ரஞ்சித்தைக் காட்டி தலித் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்
1990க்கு முன்பு தலித் அரசியல் இல்லை அப்போது தாழ்த்தப்பட்டோர் அரசியல் என்ன 1950-70வரை திராவிடர் கழகத்தில் இருந்தார்கள் பெரியாரின் திக கட்சியை "பள்ளு பற கட்சி"யென்றுதான் அழைத்தனர்.
“அது எனது அரசியலுக்குக் கிடைத்த பெருமைதான்” என்றார் பெரியார்
“அது எனது அரசியலுக்குக் கிடைத்த பெருமைதான்” என்றார் பெரியார்
பெரியாருக்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் CPI, CPM, நக்சல்பாரி கட்சிகளில் சேர்ந்து இயக்கினர்
அப்போது ஆதிக்க ஜாதியினர் CPI, CPMஐ “பள்ளி,பற கட்சி” என அழைத்தனர். தஞ்சைபகுதிகளில் இப்போதும் இப்படித்தான் அழைக்கிறார்கள்
1992க்குப் பிறகு உலகமயத்திற்குப் பிறகு வர்க்கப் போராட்டத்தை – கம்யூனிஸ்ட் கட்சியை உடைக்க NGOகளால் திருமா, கிருஷ்ணசாமி களமிறக்கப் படுகின்றனர்
சேரிகளில் இருந்த கம்யூனிஸ்ட் கொடி மரங்களை வெட்டிச் சாய்க்க திருமா உத்தரவிடுகிறார் சேரிகளில் வந்து கட்சி வளர்க்க வரும் கம்யூனிஸ்ட்டுகளைத் தாக்கத் சொல்கிறார். சேரிகளில் பல இடங்களில் நக்சல்பாரிகள், CPM, ML, தோழர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப் படுகின்றனர்
இன்று சேரி கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத க்ளீன் சேரியாக மாற்றப்பட்டுள்ளது
க்ளீன் மும்பை, க்ளீன் சென்னை, க்ளீன் இந்தியா போல க்ளீன் சேரி
அடுத்தென்ன தாழ்த்தப்பட்டோர்களில் உட்பிரிவுகள் பறையரான திருமா நம்மை சுரண்டுகிறாரென தெரிந்து ஒவ்வொரு SC பிரிவும் அதில் பல கட்சியாக சிதைந்து போய்விட்டது
திருமாவோ கட்டப்பஞ்சாயத்து, யாரையெல்லாம் எதிர்த்தாரோ அவர்களோடு மாறிமாறிக் கூட்டணி என நகர்புற மேட்டுக்குடி அரைப் பார்ப்பன பறையர்களின் ஜாதிக்கட்சியாக தேங்கிநாறி நிற்கிறார்
வர்க்கப் போராட்டத்தை சீர்குலைத்த இவர்கள் SC பட்டியலில் இருக்கும் ஜாதிக்குள்ளாவது ஒற்றுமையை உண்டாக்கினார்களா இல்லை இவர்களது ஜாதியை மட்டுமாவது முன்னேற்றினார்களா இல்லை
தலித்துகளுக்குள்ளாக ஜாதிமறுப்புத் திருமணத்தை நடத்தமுடிகிறதா இல்லை தெளிவான ஜாதி ஒழிப்பு கொள்கை இந்தியாவில் எந்த தலித் ஜாதியக் கட்சிக்காவது இருக்கிறதா இல்லை.
திடீர் போராளி பா.ரஞ்சித்திடமாவது ஜாதி ஒழிப்புக் கொள்கை இருக்கிறதா இல்லை
அப்பறம் என்னா மயித்துக்கு தலித் அரசியல் ? என்ன மயித்துக்காக தலித் அரசியல் வேண்டும்?
அம்பேத்காருக்கு இருந்த கம்யூனிச வெறுப்பு 99%எல்லா தலித் அரசியலுக்கும் இருக்கிறது. படத்தில் ரஜினியின் கடைசி மகன் பெயர் லெனின். 'புரட்சியாளர்'என ரஜினியால் கிண்டலாக அழைக்கபடுகிறார் அவரது போராட்டம் தோற்கிறது ரஜினியின் ரவுடி அரசியல் ஜெயிக்கிறது கடைசியில் லெனின் ரஜினியின் ரவுடி அரசியலுக்கே வருகிறார்
ரஜினியோடு லெனின் சண்டை போடும் போது “மண்ணையும் புரிஞ்சுக்காம மக்களையும் புரிஞ்சுக்காம ரெண்டு புஸ்தக்கப் படிச்சுப்புட்டு புரட்சின்னு பேசிக்கிட்டு திரியிறானுங்க” என திட்டுவார் அது கம்யூனிஸ்ட்டுகளைத் தாக்குவதுதான் அதனால் அந்த கேரக்டருக்குப் பெயர் லெனின் என வைத்துள்ளார்
படத்தில் லெனின் கேரக்டர் NGOவாக அடையாளப்படுத்தினாலும் நிஜத்தில் பெரிய NGO பா.ரஞ்சித் ஆதரவு பறையர் சுயஜாதி வெறியர்கள்தான். வர்க்க அரசியலற்ற லும்பன் கும்பல்.
இவர்கள் புத்தரையோ அயோத்திதாசரையோ, அம்பேத்காரின் படைப்புகளையோ, காந்தியிசத்தையோ, பெரியாரிசத்தையோ, கம்யூனிசத்தையோ படித்திருக்க மாட்டார்கள் அல்லது அரைகுறையாக படித்திருப்பார்கள்
இந்த பா.ரஞ்சித் ஆதரவு ஜாதிய வெறியர்கள் கம்யூனிச வெறுப்பாளர்கள் மட்டுமல்ல, பெரியார் வெறுப்பாளர்களும்கூட
கம்யூனிசத்தை வெறுக்க காரணமுண்டு ஆனால், வாழ்நாளெல்லாம் ஜாதி ஒழிப்பு, தனித்தமிழ்நாடு, இந்துத்துவா எதிர்ப்பென வாழ்ந்த பெரியாரை எதிர்ப்பதில் இருக்கும் அரசியல் ஆபத்தானது
இவர்களுடைய தலித் ஜாதிவெறிக்கு இந்தியா முழுவதும் புரட்சியென பேசும் முட்டாள் கம்யூனிஸ்ட்டுகளைப் போல இந்திய தலித்விடுதலை பேசும் இவர்களின் முட்டாள்தனத்திற்கு இவர்களுக்கு பெரியாரின் தேசியவிடுதலை முழக்கம் தடையாக இருக்கிறது
தலித்துகளை ஜாதிவெறியர்களாக இருக்கவைப்பதற்கு இந்துமதம் தேவைப்படுகிறது அதற்கும் பெரியார் தடையாக இருக்கிறார்
தலித்அரசியலின் புதுபிசினசான பௌத்த மதத்திற்கும் பெரியாரிசம் தடையாக இருக்கிறது
அதாவது தலித் அரசியல் என்பது சாராம்சத்தில் வலதுசாரி இந்துத்துவா அரசியல்தான். அதனால்தான் இவர்களை பெரியாரையும் எதிர்க்கிறார்கள். கம்யூனிசத்தையும் எதிர்க்கிறார்கள்
இவர்களது ஜாதிவெறியை மறைக்க பெரியாரை ஜாதிவெறியராக சித்தரிக்கிறார்கள்
கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவும் தனிநபர் ஜாதியவாதத்தை வைத்து கம்யூனிசமே தவறு என்பது போல் மிகைப்படுத்துகிறார்கள்
பா.ரஞ்சித் பேசுவது மொன்னையான தலித் அரசியல் பொத்தம் பொதுவாக ஜாதிக் கொடுமை ஜாதிக் கொடுமை என்பது, மொட்டையாக ஜாதிஒழிப்பு பேசுவது அதே பொத்தம் பொதுவான குரலில் “நிலம் எங்கள் வாழ்க்கை. நிலம் எங்கள் உரிமை” என பேசுவது என நாடகமாடுகிறார்
கடந்த 1ஆண்டாக ரஞ்சித் ஆதரவு ஜாதிவெறியர்களிடம் கேட்பது இதுதான்” ஜாதி ஒழிப்புக்கு ,நில உரிமைக்கு “உங்க தலித் அரசியல் என்னய்யா சொல்கிறதெனக் கேட்டால் இஞ்சி தின்ன குரங்காக முழிக்கிறார்கள் சில அரை வேக்காடுகள் கள்ளுக் குடித்த குரங்காக கத்தியபடிக் கம்பு சுத்துகிறார்கள்
அம்பேத்காரிடம் ஜாதி ஒழிப்புக்குத் தீர்வு இல்லையென்றாலும் அவரது ஜாதி ஒழிப்பு நோக்கத்தில் ஒரு அரசியல் நேர்மை இருந்தது பெரியாரிடம் அது இருந்தது
இந்த திடீர் ஜாதிஒழிப்புப் போராளிகளிடம் ஜாதி ஒழிப்புக் கோரிக்கையும் இல்லை அரசியல் நேர்மையுமில்லை. பொதுவாழ்வில் தூய்மையுமில்லை.
ஜாதி ஒழிப்பென்பது எல்லா ஜாதியிலும் இருக்கும் ஜாதி மறுப்பாளர்களை இணைத்தும் சுயஜாதியை வெறுக்கும் மதசார்பற்ற ஜாதிசார்பற்ற மக்களை தோழர்களை கொண்டுதான் சாத்தியமாகும்
ஜாதிஒழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தோடு இணைப்பதன் மூலமே ஜாதி ஒழிப்பு சாத்தியமாகும்
அகமணமுறையை ஒழிப்பதன் மூலமே ஜாதி ஒழிப்பு சாத்தியப்படும்
முழுமையான ஜாதிஒழிப்பு பொதுவுடைமையில்தான் சாத்தியப்படும்
இது எதையுமே பேசாமல் மொட்டையாக அரைவேக்காட்டுத்தனமாக “ஐயோ ஜாதிக்கொடுமை,ஐயோ ஜாதி ஒழிய வேண்டுமென ” பா.ரஞ்சித் போல மேடையில் கதாபிரசங்கம் வேண்டுமானால் நடத்தலாம்
பார்ப்பன ஜாதிவெறியைப் போல இடைநிலை ஆதிக்க ஜாதிவெறியைப் போல தலித் ஜாதிவெறியையும் ஜாதிவெறியர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய காலச் சூழல் இருக்கிறது
பா.ரஞ்சித் ஆதரவுக் கும்பல் தலித் ஜாதி வெறியை எதிர்ப்பதுமில்லை அதை எதிர்ப்போரை தலித் விரோதி என முத்திரை குத்தவதையும் நிறுத்தப் போவதுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக