புதன், 6 ஜூன், 2018

இன்பத்தின் உச்சத்தை ECSTASY அடையுங்கள்!
நீட் தேர்வில் இயற்பியலில்
171 மதிப்பெண் எடுத்தது எப்படி?
கணக்கின் விடை மற்றும் விளக்கம்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் 180க்கு 171 மார்க் எடுத்த
மாணவி, எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை
மற்றும் தவறான விடை எழுதி இருப்பார் என்ற
கேள்வியைக் கேட்டு .இருந்தோம். அதற்கான
விடையும் விளக்கமும் காண்க.

முதலில் மார்க் வழங்கும் முறை பற்றி அறிவோம்.
இயற்பியலில் மொத்தம் 45 கேள்விகள். சரியான
விடைக்கு ஒரு கேள்விக்கு 4 மார்க் வீதம், அதிகபட்ச
மார்க்- 45 x 4= 180. ஒவ்வொரு தவறான விடைக்கும்
1 மார்க் கழிக்கப்படும். விடையளிக்காத கேள்விக்கு
பூஜ்யம் மார்க். இதுதான் மார்க் போடும் முறை.

171 மார்க் எப்படி வாங்கினார் என்பதை அறிந்திட,
எந்தவொரு மாணவரும் எப்படி மார்க்
வாங்குகிறார்கள் என்பதை முதலில் கண்டறிந்து
அதை ஒரு மாட்ரிக்சில் வைப்போம்.

சரியான விடையை (correct answer) C என்றும்,
தவறான விடையை ( wrong answer) W என்றும்
பதிலளிக்காத நிலையை (unanswered) U என்றும் கொள்க.
பின்வரும் நிகழ்வுகள் (events) ஏற்படுகின்றன. இவை
அனைத்தும் sure events ஆகும். நிகழ்வை E என்று கொள்க.

E1...All the answers are correct... This means C+W+U = 180+0+0=180.

E2...44 correct, no wrong,1 unanswered... C+W+U= 176+0+0 =176

E3...44 correct, 1 wrong, no unanswered... C+W+U = 176-1+0 = 175

E4...43 correct, no wrong, 2 unanswered...C+W+U =172+0+0 = 172

E5...43 correct, 1 wrong, 1 unanswered...C+W+U = 172-1+0 = 171

E6...43 correct, 2 wrong, no unanswered... C+W+U = 172-2+0 = 170

E7...42 correct, no wrong, 3 unanswered... C+W+U = 168+0+0 = 168

E8...42 correct, 1 wrong, 2 unanswered... C+W+U = 168-1+0 = 167

E9... 42 correct, 2 wrong, 1 unanswered... C+W+U = 168-2+0 = 166

E10...42 correct, 3 wrong, no unanswered...C+W+U = 168-3+0 = 165

and so on.

இவ்வாறு அத்தனை உறுதியான நிகழ்வுகளுக்கும்
(sure events) உரிய மார்க் பட்டியலைத் தயாரிக்கலாம்.
அதை manualஆகச் செய்தால் நேரம் சற்றுக் கூடுதல்
ஆகும். கணினியில் உரிய program  செய்து
மார்க் பட்டியலைப் பெறலாம்.

கணினிக்கு  கட்டளை வழங்கி அதை வேலை வாங்க
வேண்டுமெனில், கணினி மொழி தெரிய வேண்டும்.
C language போன்ற மொழிகள் இங்குதான் தேவைப்
படுகின்றன.

எந்தவொரு சிக்கலான quadratic equationக்கும் C language
மூலம் கட்டளைகள் கொடுத்து தீர்வு காணலாம்.
Matrix addition போன்ற எளிய வேலைகளை கணினி
செய்யும்.

நான் இங்கு கூற விரும்புவது என்னவெனில்,
C language தெரியாமல் ஒருவரின் கணித அறிவோ
இயற்பியல் அறிவோ முழுமை அடையாது என்பதே.

நான் ஒரு தனியார் பயிலகத்தில் C language
படித்தபோது நேர்ந்த அனுபவங்களைத் தனியாகக்
கூற வேண்டும். சொல்லிக் கொடுப்பவர்கள்
அத்தனை பேரும் arts group ஆட்கள். என்னுடைய
தேவையோ அறிவியல் பாடங்களுக்கான தேவை.
சொல்லிக் கொடுப்பவருக்கும் கற்றுக்
கொள்பவருக்கும் compatibility இல்லாமல் பெருத்த
சிரமங்கள் ஏற்பட்டன.

சரி, மீண்டும் கேள்விக்குத் திரும்புவோம்.
அந்தப் பெண் இயற்பியலில் 171 மார்க் எப்படி
எடுத்தார் என்பதை மேலே காட்டப்பட்ட
பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
அந்தப் பெண் மட்டுமல்ல, நீட் எழுதும் எவர்
ஒருவரும் இப்படித்தான் மார்க் எடுக்க முடியும்.

மதிப்பெண்கள் ஒரு set of natural numbers போல,
தொடர்ச்சியாக இருக்காது; இருக்கவும் முடியாது.
ஆக இங்கு ஒரு discontinuity இருக்கிறது. அதே நேரத்தில்
இது ஒரு continuous discontinuity ஆகும். குவான்டம்
தியரியில், black body radiationல் மாக்ஸ் பிளாங்க் கூறிய
குவான்டம் குவான்டமாக (quantum by quantum) ஆற்றல்
வெளியிடப் படுவதை இது உணர்த்துகிறதா?
அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?  

 continuous discontinuity, discontinuous continuity ஆகிய இரண்டையும்
இந்த மார்க் விவகாரம் எனக்கு உணர்த்துவதாக
நான் கருதுகிறேன். 

இந்தக் கட்டுரையை நேரம் இல்லாமல் போனதால்
தாமதமாக எழுதுகிறேன். வாசகர்கள் மன்னிக்கவும்.
ஒவ்வொரு கணக்கையும் சரியாகவும் நிறைவாகவும்
செய்து முடித்த பிறகு. ஒரு ECSTASY ஏற்படுகிறதா?
எனக்கு ஏற்படுகிறது. நன்றி.

திருவள்ளுவர் ஒரு mathematicianஆக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தக் குறளை அவரால்
இயற்றி இருக்க முடியாது.

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.  
***********************************************************

கணக்கிற்கான விடையின் இதயம் போன்ற பகுதி!

பல ஆண்டுகளுக்கு முன்பு,


மிக்க நன்றி. நீங்கள் ஒரு திறன் வாய்ந்த Programmer
and expert in C என்பது மிகவும்  மகிழ்ச்சியைத் தருகிறது.
computer programming நிபுணர்கள் பட்டியலில் உங்களை
வைத்துக் கொள்கிறேன். தேவை ஏற்பட்டால்
தொடர்பு கொள்கிறேன். 
ஆஹா, அற்புதமான program கிடைத்து விட்டது.
நீட் தேர்வில் எந்த ஒரு மாணவரும் எப்படி மார்க்
எடுக்கிறார்கள், எப்படி எடுக்க முடியும் என்பதற்கான
program இது.இதன் பயனை அனைவரும் நன்கு உணர
வேண்டும். ஒரு நொடியில் மொத்த நீட்டையும்
இந்த program தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.
அறிவியலின் தனிப்பெருமை. நண்பர் சிவசங்கர
நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
 
Python பற்றியும் அதன் திறன் பற்றியும் கேள்விப்பட்டு
இருக்கிறேன்.அதற்கு மேல் ஒன்றும் தெரியாது.
வானம் வசப்பட்டுக் கொண்டே இருக்கிறது மனிதனுக்கு.


-----------------------------------------------------------------------------------------
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக