தொழில்கள் ஏற்படுத்தும் மாசு!
சிவப்புத தொழில் என்றால் என்ன?
ஆரஞ்சுத் தொழில் என்றால் என்ன?
எவையெல்லாம் மாசு ஏற்படுத்தும்?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
ஒவ்வொரு தொழிலும் மாசு ஏற்படுத்துகிறது.
மாசு ஏற்படுத்தாத தொழில் என்று எதுவும்
கிடையாது. குறைவான மாசு, கூடுதலான மாசு
என்பதுதான் வேறுபாடு..
மத்திய அரசு அதிகமாக மாசு விளைவிக்கும்
17 தொழில்களை சிவப்பு நிறத் தொழில்களாக
வகைப்படுத்தி இருந்தது. சிவப்பு= ஆபத்து.
இந்த வகைமை 2016ஆம் ஆண்டு வரை நீடித்தது.
2016 மார்ச்சில் புதிய வகைமையை (new categorization)
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்தது.
சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 5, 2016இல் இதற்கான அரசாணையைப்
பிறப்பித்தார்.
புதிய வகைமையில் சிவப்பு நிறப் பிரிவில்
60 தொழில்கள் உள்ளன. முன்பு 17 தொழில்கள்
மட்டுமே ஆபத்தானவை என்ற நிலைமை மாறி
60 தொழில்கள் ஆபத்துப் பட்டியலில் கொண்டு
வரப் பட்டுள்ளன. அணுமின்சாரம் தயாரிக்கும்
தொழில் பழைய பட்டியலில் சிவப்புப் பிரிவில்
இல்லை. தற்போது அது சிவப்புப் பட்டியலில்
உள்ள 60 தொழில்களில் ஒன்றாக உள்ளது.
"Re-categorization of industries based on their pollution load is a
scientific exercise" என்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்
வெளியிட்டுள்ள அறிக்கை.
"The Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)
has developed the criteria of categorization of industrial sectors based
on the Pollution Index which is a function of the emissions (air pollutants),
effluents (water pollutants), hazardous wastes generated and consumption
of resources" என்கிறது மேலும் அந்த அறிக்கை.
தொழில்களை வகைப் படுத்துவதில் மாசுக்குறியீடு
(pollution index) அளவுகோலாக உள்ளது.
0 முதல் 100 வரையிலான எண்களைக் கொண்டது
இந்த மாசுக் குறியீட்டு அளவுகோல்.
புதிய வகைமையின்படி தொழில்கள் நான்கு
பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
சிவப்பு = அதிக ஆபத்து,
மாசுக் குறியீடு (pollution index) 60ம் அதற்கு மேலும்.
ஆரஞ்சு = இரண்டாம் நிலை ஆபத்து
மாசுக்குறியீடு 41 முதல் 59 வரை.
பச்சை = மிகக் குறைந்த மாசு
மாசுக்குறியீடு 21 முதல் 40 வரை.
வெள்ளை= மிக மிகக் குறைவான மாசு.
மாசுக்குறியீடு 20 வரை (20ஐ உள்ளடக்கியது).
ஒவ்வொரு வகையிலும் எத்தனை தொழில்கள்
உள்ளன என்பதைப் பார்ப்போம்.
சிவப்பு = 60
ஆரஞ்சு = 83
பச்சை = 63
வெள்ளை = 36.
60 சிவப்புத் தொழில்களில் சில:
1. சர்க்கரை ஆலைகள் (வரிசை எண்:12)
2. பட்டாசு ஆலைகள் (எண்: 14)
3.சிமிண்டு ஆலைகள் (எண்: 26)
4. அணு மின்சார உலைகள் (எண்: 36)
5.தோல் பதனிடும் ஆலைகள் (எண்: 44)
6.தாமிர உருக்காலை (எண்: 50)
இன்னும் பல. பட்டியலைப் படிக்கவும்.
தோல் பதனிடும் ஆலைகளும் தாமிர உருக்காலையும்
ஏற்கனவே 17 தொழில்களைக் கொண்ட பழைய
பட்டியலிலும் இருந்தன.
ஆரஞ்சுப் பட்டியலில் உள்ள 83 தொழில்களில் சில:
1. குறுந்தகடு, கணினி பிளாப்பி தயாரிப்பு (CD, FLOPPY)
2. ஐஸ்கிரீம் தயாரிப்பு
3. ஸ்பிரே பெயிண்டு தயாரிப்பு
4. கொசு விரட்டிச் சுருள் தயாரிப்பு
5.மென்பானங்கள் தயாரிப்பு (soft drinks)
பச்சைப் பிரிவில் வரும் தொழில்களில் சில:
1. அலுமினியப் பாத்திரம் தயாரிப்பு
2. ஆயுர்வேத மருந்து தயாரிப்பு
3. மாவு அரவை ஆலைகள் (flour mills)
4. நீற்றுச் சாம்பல் ஏற்றுமதி (Fly ash export)
5. மினரல் வாட்டர் தயாரிப்பு
வெள்ளைப் பிரிவில் வரும் தொழில்கள்:
1. நீற்றுச் செங்கல் தயாரிப்பு (Fly ash bricks/block)
2.வாசனைப் பாக்கு தயாரிப்பு
3. பவுன்டன் பேனா தயாரிப்பு
4.கைத்தறி மற்றும் ஜமுக்காளம் நெசவு
5. கயிறு தயாரித்தல் (பிளாஸ்டிக் மற்றும் பருத்தி)
முழுப்பட்டியலையும் வாசகர்கள் படித்துத்
தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் இருத்திக்
கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக முதல் இரண்டு கமெண்ட்களில் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின்
புதிய பட்டியலைக் கொடுத்துள்ளோம்.
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள விவரங்கள்
சரியானவை, துல்லியமானவை, மெய்யானவை,
அதிகார பூர்வமானவை. கண்டவர்கள் சொல்வதையும்
கேட்டு அரைகுறைத் தகவல்களுடன் திரிய வேண்டாம். இக்கட்டுரைக்கு நாங்கள்
பொறுப்பேற்று வெளியிடுகிறோம்.
With AUTHORITY and APLOMB நியூட்டன் அறிவியல் மன்றம்
இக்கட்டுரையை வெளியிடுகிறது.
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக