அறிவுப்போட்டி நடந்தே ஆக வேண்டும்!
எந்தக் காரணம் கொண்டும் யாரும்
பின்வாங்கக் கூடாது!
அழகிப்போட்டி நடக்கலாம், அறிவுப்போட்டி
நடக்கக் கூடாதா?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
காலங்காலமாக தமிழ்நாட்டில் அறிவுப்போட்டி
நடந்து கொண்டுதான் இருந்தது. முன்பெல்லாம்
நடக்கும் அறிவுப்போட்டியில் பார்ப்பான் மட்டுமே
கலந்து கொள்வான். போட்டி நடக்கும் இடத்தைச்
சுத்தம் செய்து கொண்டும், அங்கு நடக்கும் பந்தியில்
எச்சிலை எடுத்துக் கொண்டும் இருந்தான் சூத்திரன்.
காலம் மாறியது. சமூகம் மாறியது. சூத்திரன்
படித்தான். அறிவாளி ஆனான். என்றாலும்
தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தில் சூத்திரர்களில்
உள்ள படித்தவனோ அறிவாளியோ இடம் பெறவில்லை.
தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் பெரும்
செல்வாக்குப் பெற்றிருந்த பெரியார், காமராசர்,
கலைஞர், ராமச்சந்திர மேனன் ஆகிய நால்வரும்
படிக்காத சூத்திரர்களே. நாடு சுதந்திரம்
அடைந்தது முதல் இன்று வரை இந்த நால்வரின்
தாக்கம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.
விதிவிலக்காக சூத்திரக் கூட்டத்தில் படித்தவராக
அறிஞர் அண்ணா.இருந்தார். ஊழல், வாரிசு
அரசியல் இரண்டிலும் ஈடுபடாதவர் அண்ணா.
அதனால்தானோ என்னவோ சூத்திரக் கூட்டம்
அவரை எளிதில் மறந்து விட்டது. தனக்கு நியாயமாகச்
சேர வேண்டிய புகழைப் பெறாமலே அண்ணாவும்
மறைந்து போனார்.
சூத்திரன் வாரிசு அரசியல் என்னும்
இழிதகைமையில் மூழ்கித் திளைத்தான்.
தற்குறிகள் வாரிசு என்ற ஒரே காரணத்தால்
அரசியலில் உச்சத்தை அடைந்தனர்.
ஆக, அரசியல் என்றாலே அதில் படித்தவனுக்கு
இடமில்லை என்ற நிலை நீடித்தது.
இந்த நிலை கொஞ்சங் கொஞ்சமாக, லேசாக
மாறத் தொடங்கி உள்ளது. வாரிசு அரசியல்
என்பது மாற்றமின்றி நீடித்தாலும் கூட,
படித்தவர்கள் அரசியலில் பங்கு பெற்று
கட்சித் தலைமை போன்ற பொறுப்புகளுக்கு
வரத் தொடங்கி உள்ளனர்.
தற்போது இரண்டு சூத்திர அரசியல்
தலைவர்களுக்கு இடையில் யார் அறிவாளி என்ற
போட்டி நடக்கிறது. சூத்திரத் தமிழிசை,
சூத்திர அன்புமணி இருவருக்கும் இடையில்
யார் அறிவாளி என்ற போட்டி நடக்கிறது.
ஒரு காலத்தில் யார் அறிவாளி என்ற போட்டி
இரண்டு பார்ப்பனர்களுக்கு இடையில்
மட்டுமே நடக்கும். இப்போது இரண்டு
சூத்திரர்களுக்கு இடையில் நடக்கிறது.
இதை வளர்ச்சியின் அடையாளமாக, சமூக
மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்க வேண்டும்.
சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
அவர்களுக்கும் அறிஞர் அண்ணா அவர்களுக்கும்
நடந்த சொற்போர் வரலாற்றை தமிழகம் அறியும்.
இதுவும் இரண்டு சூத்திரர்களுக்கு இடையிலான
போட்டிதான்.
இது போன்றதுதான் தமிழிசை அன்புமணி
ஆகியோருக்கு இடையிலான போட்டியும்.
இவ்விருவரில் யாரும் நழுவிச் செல்லாமல்
போட்டியில் பங்கு பெற வேண்டும்.
இருவரில் யார் அறிவாளி என்பதை முடிவு செய்ய
யாராவது பார்ப்பானிடம் போய் கையைக்
கட்டிக் கொண்டும் தலையைச் சொறிந்து
கொண்டும் நிற்க வேண்டியதில்லை. அதை
முடிவு செய்யும் பொறுப்பை நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்றுக் கொள்கிறது.
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தும் தேர்வில்
யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அவரே
அறிவாளி ஆவார். தீர்ப்பு வழங்க நியூட்டன்
அறிவியல் மன்றம் ஆயத்தமாக இருக்கிறது.
போட்டியாளர்களே வாருங்கள்!
****************************************************
பின்குறிப்பு:
இப்படி ஒரு போட்டியை நடத்தக் கூடாது என்று
அஞ்சாநெஞ்சனிடம் இருந்து மிரட்டல் வந்தது.
உழைத்துச் சாப்பிடுபவனை இந்த மிரட்டல்
ஒன்றும் செய்யாது. எனவே பதிலுக்குப் பதில்
நானும் கெட்ட வார்த்தைகளில் திட்டினேன்.
அதை ஆடியோ பதிவு செய்துள்ளேன். எனினும்
அந்தக் காசட்டை இப்போது வெளியிட இயலாது.
சீமானிடம் ஒப்படைக்க அதை ஒரு நண்பர்
வாங்கிக் கொண்டு .போய்விட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக