ஞாயிறு, 3 ஜூன், 2018

இந்தக் கட்டுரையை நான் அன்றே படித்தேன்.
இக்கட்டுரை வரவேற்புக்கு உரியது. அதே நேரத்தில்
ஒரு கட்டுரையை எழுதி விடுவது என்பது மிகவும்
கருநிலையில் உள்ள ஓர் தொடக்கம். அவ்வளவே.
பிற்காலத்தில் அதை ஒரு ஆதாரமாகக் காட்ட
இயலும் என்பதைத் தவிர, இதனால் வேறு என்ன பயன்? 

வைகுண்டராஜனை எதிர்த்து என்ன இயக்கம் நடத்தப் 
பட்டது என்பதே முக்கியம்.வைகுண்டராஜனை
எதிர்த்து மக்களைத் திரட்டி, மக்களிடம் அவரை
அம்பலப் படுத்தி. தொடர்ச்சியான இயக்கங்கள்
கட்டமைக்கப் பட்டனவா? இதுவரை இல்லை
என்றாலும், தற்போது தூத்துக்குடி மக்கள்
தாங்களாகவே திரண்டு போராடும்போது,
வைகுண்டராஜனின் டைட்டானிக் பிக்மென்ட்ஸ்
ஆலையை, அது உண்டாக்கும் மாசு, சூழல் சீர்கேட்டை  எதிர்ப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது உண்டா?
இல்லை என்பதே உண்மை. எந்த அமைப்புமே
செய்யவில்லை, செய்வதற்கான திட்டம் இல்லை
என்பதும் உண்மை.
  
 

1 கருத்து: