மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு
அறிவியலின் கைக்கு வந்த காலண்டர்!
ரோ.மு, ரோ.பி என்றால் என்ன?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர்
(காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின்
பிடிக்குள் வந்து விட்டது.
2) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர்
உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த
காலண்டரே.
அ)ஓராண்டுக்கு 12 மாதங்கள்
ஆ)ஓராண்டுக்கு 365.25 நாட்கள்
இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது
பிப்ரவரியில் 29 நாட்கள்
ஆகிய அனைத்து அம்சங்களுமே கிமு 46ல் ஜூலியஸ்
சீசரால் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு
முதல், அதாவது, கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு
வந்து விட்டன.
3) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது,
இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது
கருதத் தக்கது.
4) அப்படியானால், ஜூலியன் காலண்டரில்
ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)
5) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம்
உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி
என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும்
இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை.
ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே
இதைப் பின்பற்றினர்.
ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால்,
ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.
6) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி
என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்
கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த
ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில்,
கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத்
தொடங்கியது.
7) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus)
என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித
நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற
கணக்கிடும்முறையை அறிமுகம் செய்தார்.
என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
8) கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம்
கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு
குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு
400 ஆண்டுக் காலத்திலும் மூன்று லீப் ஆண்டுகளைக்
குறைத்தார்.
9) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர்
செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால்
பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய
காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப்
பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம்
செய்தவர் கிரெகோரி என்பதால் இக்காலண்டர்
கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.
10) ஆண்டுகளைக் கணக்கிடும் முறையில் எந்த
மாற்றமும் இல்லை. கிரெகோரி காலண்டரின்
கணக்கிடுதல் முறை அப்படியே நீடிக்கிறது.
கிபி 525ல் டயோனிசியஸ் துறவி ஏற்படுத்திய
கிமு கிபி என்ற பெயர்கள் மட்டுமே நீக்கப் படுகின்றன.
11) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப்
பொதுமையை உறுதி செய்கிறது. உலகின்
அனைத்து நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன.
இது மானுடத்தின் வெற்றி. இது அறிவியலின் வெற்றி.
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக