செவ்வாய், 19 ஜூன், 2018

இரண்டு மரண தண்டனையும்
மூன்று ஆயுள் தண்டனைகளும்!
ராஜிவ் படுகொலை!
நளினியின் தண்டனை விவரங்கள்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
தடா நீதிமன்றம் பின்வரும் தண்டனைகளை
நளினிக்கு விதித்து இருந்தது.
1) இரண்டு மரண தண்டனைகள்
2) மூன்று ஆயுள் தண்டனைகள்
3) மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை
4) ஓராண்டு கடுங்காவல் தண்டனை.
ஆக மொத்தம் 7 தண்டனைகள்.

1) IPC (Indian Penal Code) சட்டம்
2) வெடிபொருள் சட்டம் (Explosive substances act)
3) ஆயுதங்கள் சட்டம் (Arms act)
4) பாஸ்போர்ட் சட்டம் (Passport act)
5) வெளிநாட்டினர் சட்டம் (Foreigners act)
6) வயர்லெஸ், தந்தி சட்டம் (Wireless and Telegraphy act)
7) தடா சட்டம் (TADA act)
ஆகிய 7 சட்டங்களில் பல்வேறு சட்டப் பிரிவுகளில்
உள்ள குற்றச்சாட்டுக்கள் மீது நளினிக்கு
மேற்கூறிய 7 தண்டனைகள் வழங்கப் பட்டன.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் மரண தண்டனை
உறுதி செய்யப் பட்டது. கலைஞர் அரசு மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

அந்த தண்டனையை அவர் தற்போது அனுபவித்துக்
கொண்டிருக்கிறார். 27 ஆண்டுகள் முடிந்து விட்டன.
28ஆவது ஆண்டுச் சிறைவாசம் தொடங்கி
இருக்கிறது.

(ராஜிவ் படுகொலை கட்டுரைத் தொடரில் இருந்து)
படத்தில்: லண்டனில் மருத்துவம் பயிலும் நளினியின்
மகள் ஹரித்ரா ஸ்ரீஹரன் 
***************************************************************     

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக