புதன், 20 ஜூன், 2018

SAFETY 1 மூன்று தூக்குத் தண்டனை பெற வேண்டிய
குற்றவாளி சந்திரா சாமியை
ஈழ ஆதரவுப் போலிகள்  எதிர்க்காமல் இருந்தது ஏன்?
கலைஞரும் ஏன் எதிர்க்கவில்லை?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
சந்திரா சாமி! ராஜிவ் படுகொலையில் முக்கிய
குற்றவாளிகளில் ஒருவர். ராஜிவ் கொலைச்சதி,
சதி நிறைவேற்றம், போலீசிடம் மாட்டாத
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் உதவி கேட்டு
வந்தால், அவர்களை வெளிநாடு தப்பிச் செல்ல
உதவி செய்தல் என்று ராஜிவ் படுகொலையின்
அத்தனை அம்சங்களிலும் தொடர்பு உடையவர்
சந்திரா சாமி.

இவர் பிடிபட்டு இருந்தால், நிச்சயமாக மூன்று
மரண தண்டனைகள், ஐந்து ஆயுள் தண்டனைகள்
என்று தடா நீதிமன்றம் அவருக்கு வழங்கி இருக்கும்.
ஆனால், கடந்த ஆண்டு சந்திரா சாமி இறந்து விட்டார். 
எனவே இனி அவரைப் பற்றிப் பேசுவதால்
அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை..

சந்திரா சாமிக்கு வேண்டியவர்கள் மிகவும் பெரிய
இடத்தில் இருந்த இருவர். 1. ராஜிவ் கொலை நடந்த
போது, பிரதமராக இருந்த சந்திர சேகர். 2. ராஜிவ்
கொலைக்குப் பின் பிரதமராக வந்த நரசிம்ம ராவ்.
இவர்கள் இருவரின் அரவணைப்பு காரணமாக,
சந்திராசாமியின் நிழலைக்கூட எவரும் நெருங்க
முடியாத நிலை இருந்தது.

இங்கு ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறேன்.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு என்றும் ராஜிவ்
கொலையாளிகளுக்கு ஆதரவு என்றும் தீவிரமாக
இயங்கி வருகிற எவராவது இதுவரை சந்திராசாமியைக்
கண்டித்து ஒரு வார்த்தை பேசியதுண்டா?

வைகோ, நெடுமாறன் இவ்விருவரும் என்றாவது
சந்திரா சாமியைக் கண்டித்து ஒரு சொல் சொல்லி
இருப்பார்களா? கிடையாது. ஆரம்பத்தில் நேர்மையாக
இருந்து, பின் சந்தர்ப்பவாதச் சாக்கடையில்
விழுந்த திருச்சி வேலுச்சாமி, 1990களில் சந்திரா
சாமியை அம்பலப் படுத்திப் பேசினாரே,
அப்போது வைகோவோ நெடுமாறனோ அதை
ஆதரித்தது உண்டா? கிடையாது.

வைகோவும் நெடுமாறனும் திருச்சி வேலுச்சாமியுடன்
ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதோ, அல்லது
அவருடன் இணக்கமாகச் செயல்பட்டு சந்திரா
சாமியை அம்பலப் படுத்தியதோ உண்டா?
கிடையாது.

ஏன்? சந்திரா சாமி புலிகளின் நண்பர். புலிகளுக்கு
ஆயுத சப்ளை செய்யும் தரகர். அதிநவீன
ஆயுதங்களை, ஆயுத வியாபாரிகளிடம் இருந்து
வாங்கி புலிகளுக்கு விற்பவர் சந்திரா சாமி.
அது மட்டுமல்ல, ஆயுதங்கள் கடல்  வழியாக,
புலிகளின் இருப்பிடம் சென்று சேரும் வரை,
உளவுத்துறை, இந்தியக்  கடற்படை ஆகியோரிடம்
சிக்காமல் பாதுகாத்து, பத்திரமாகக் கொண்டு
சேர்ப்பவர் சந்திரா சாமி.

எனவே சந்திரா சாமியைக் கண்டிப்பது என்பது
புலிகளையே கண்டிப்பதாகும். இதை வைகோவும்
நெடுமாறனும் செய்வார்களா? செய்ய முடியுமா?
செய்தால் அவர்கள் உயிருடன் இருக்க முடியுமா?

எனவேதான், ராஜிவ் கொலைக் குற்றவாளி சந்திரா
சாமியைக் கைது செய் என்று ஒருநாளும்
குரல் எழுப்பவில்லை வைகோவும் நெடுமாறனும்.
சந்திரா சாமி இல்லாமல் ராஜிவ் கொலை
நடந்திருக்காது என்று நன்கு தெரிந்தவர்கள்
வைகோவும் நெடுமாறனும். (கவனிக்கவும்: இந்த
உண்மை ராஜிவ் கொலையுண்ட பிறகு
அவர்களுக்குத் தெரிய வந்தது).

சரி, இவர்கள் புலிகளின் கூலிகள். இவர்களை
விட்டுத் தள்ளுங்கள். கலைஞர் கருணாநிதி
ஏன் சந்திரா சாமியைக் கண்டித்து ஒரு குரல்
கூட எழுப்பவில்லை? அவர்தான் ராஜிவ்
கொலையால் அதிகமான பாதிப்புக்கு உள்ளானவர்.
பொய்யாக தன் மீது சுமத்தப்பட்ட ராஜிவ்
கொலைப்பழியைச் சுமந்தவர்.(அந்தக் காலத்தில்
கருணாநிதிதான் கொலைகாரன் என்று வாழப்பாடி
ராமமூர்த்தி பேசாத பேச்சா?)

இவ்வளவு பாதிப்புக்குப் பின்னரும் ஏன் கலைஞர்
சந்திரா சாமியை அம்பலப் படுத்தவில்லை?
ஏனென்றால், கலைஞரால் அது முடியாது. சந்திரா
சாமியை எதிர்த்து கலைஞர் ஓர் அறிக்கை
விடுத்த மறு நிமிடமே, அவரைச் சிறையில்
தள்ளி இருப்பார்கள். அல்லது கொன்று கூட
இருப்பார்கள். இதுதான் உண்மை.

எனவே ஜெயின் கமிஷனில் மூச்சுப் பிடிக்க
வாதாடிய திமுக வழக்கறிஞர் திண்டிவனம்
வெங்கட் ராமன்,சந்திரா சாமியைக் கண்டால்
குனிந்து கும்பிட்டு ஆசி வாங்கி கொண்டு
மரியாதையோடு போய் விடுவார். துஷ்டனைக்
கண்டால் தூர விளக்கு என்பதே கலைஞர்
அவருக்கு இட்ட கட்டளை!

ராஜிவ் கொலையில் சிவராசனுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் உண்டோ, அதே அளவு
முக்கியத்துவம் உடையவர் சந்திரா சாமி.
ராஜிவ் கொலையின் முக்கியமான குற்றவாளி
சந்திரா சாமி.

ஈழ ஆதரவு என்றும், எழுவர் விடுதலை என்றும்
பிதற்றித் திரியும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்கள் எவராவது சந்திரா சாமியை என்றாவது
கண்டித்தது உண்டா?

 நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலைக்கு
பெரும் தடையாக இருந்தவர் சந்திரா சாமி
என்பது அதிகாரத் தாழ்வாரங்களில்
உள்ளவர்களுக்குத் தெரியும். வைகோ நெடுமாறன்
வகையறாவுக்கும் தெரியும். என்றாலும், வைகோ
நெடுமாறன், சீமான், திருமுருகன், கொளத்தூர் மணி
வகையறாக்கள் யாராவது சந்திரா சாமியைக்
கண்டித்தது உண்டா? கிடையாது. ஏன்? பயம்!
இதுதான் இந்தப் போலிகளின் யோக்கியதை! 

சுப்பிரமணியம் சுவாமி, சோனியா, மூப்பனார்,
ஜெயலலிதா பற்றி அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.

பின்குறிப்பு:
சந்திரா சாமி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் ஆகிய
மூவருமே இன்று உயிருடன் இல்லை.   
*****************************************************
தொடரும்
---------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக