ஞாயிறு, 24 ஜூன், 2018

வசவுகள் லும்பன்களுக்குச் சொந்தம்!
கருத்தியல் மறுப்புகள் எமக்குச் சொந்தம்!
------------------------------------------------------------------------
ஞானி என்னும் தனிமனிதர் மீது வசைகளை
அவதூறுகளை அள்ளித் தெளிப்பது
மார்க்சியவாதியின் வேலை அல்ல. அதற்கென்றே
பிறந்த குட்டி முதலாளித்துவ லும்பன்கள்
அதைச் செய்வார்கள்.

ஞானி முன்வைத்த கொள்கை, கோட்பாடு,
கருத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் மீது
மட்டுமே நியூட்டன் அறிவியல் மன்றம்
அக்கறை கொள்கிறது. ஞானியின் கருத்துக்களை
நேருக்கு நேர் எதிர்கொண்டு முறியடிக்கிறது.

எல்லாம் தெரிந்தவர்களாகத் தங்களைக் கருதிக்
கொள்ளும் அறிவில்  சிறந்த பெருமக்களுக்காக
இக்கட்டுரைத் தொடர் எழுதப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் ப்ளஸ் டூ
முடித்து பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.
அப்போது அவர்களுக்கு 18 வயது முடிந்து
அடல்ட் (adult) ஆகி விடுகிறார்கள். அவர்களைக்
கருத்தில் கொண்டே, அவர்களுக்கு என்ன தெரியும்,
என்ன தெரியாது என்பதைக் கணக்கில் கொண்டே
இக்கட்டுரைகள் எழுதப் படுகின்றன.

இமானுவேல் கான்ட் பற்றியும் அவருக்கு மறுப்புக்
கொடுத்த ஏங்கல்ஸ் பற்றியும் மேற்கூறிய
10 லட்சம் பேரில் எத்தனை பேருக்குத் தெரியும்
என்று சிந்திப்பது நல்லது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக