திங்கள், 18 ஜூன், 2018

6000 பக்கங்கள் கொண்ட  நீதிமன்ற ஆவணங்களை
எப்படி இங்கு நகல் எடுத்து பதிவிட முடியும்?
எதையும்  படிக்காமல், படித்துத் தெரிந்து
கொள்ளாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு
உரித்த வாழைப்பழம் எதிர்பார்க்கக் கூடாது.
காமன் சென்சுடன் பேசவும். முட்டாள்களுக்காக
நான் சிலுவையைச் சுமக்க முடியாது.

ராஜிவ் கொலை என்பது உணர்ச்சிவசப்பட்டு நடந்து
விட்ட ஒரு சம்பவம் அல்ல. வரப்புத் தகராறில்
பங்காளிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்ட
போது, உணர்ச்சி வேகத்தில் கண நேரத்தில்
நடந்து முடிந்து போன ஒரு நிகழ்வு அல்ல. இது
ஒரு மாபெரும் ஏகாதிபத்தியச் சதி. அந்தச் சதியின்,
அந்தச் சங்கிலியின் முதல் கண்ணியாக
இந்தியரான சந்திரா சாமி இருந்தார் என்பது
வரைக்கும் மட்டுமே இந்தக் கட்டுரை சுட்டுகிறது.

பிற விவரங்கள் அடுத்தடுத்த கட்டுரைகளில்
வெளியிடப்படும். ஒரே  கட்டுரையில்
எல்லாவற்றையும் எழுத இயலாது.

சிவராசன் புலிகள் அமைப்பில்தான்
சாகும் வரை இருந்தார். அமைப்பை விட்டு
வெளியேறவில்லை. புலிகள்
அமைப்பில் அப்படிச் சுலபமாக வெளியேறி
விட முடியாது. அது என்ன நம்மூர் திமுக,
அண்ணா திமுக போன்றதல்ல, போய்ப்போய்
வருவதற்கு. புலிகள் அமைப்பை விட்டு
வெளியேறினார் என்றால், அமைப்புக்கும்
அவருக்கும் முரண்பாடு முற்றியதாலேயே
வெளியேறினார் என்று அர்த்தம். அப்படி
வெளியேறி இருந்தால், புலிகள் அமைப்பு
அவரை வேட்டையாடும். பொட்டு அம்மானின்
கண்காணிப்பை மீறி யாரும் அமைப்பை
விட்டு வெளியேறி விட முடியாது. வெளியேறுவது
என்பதன் பொருள் மரணத்தை வரவழைத்துக்
கொள்வதுதான். அதற்கான தேவை சிவராசனுக்கு
என்ன இருந்தது? ஒன்றும் இல்லை.

அரை வேக்காட்டு குட்டி முதலாளித்துவ ஊடக
முட்டாள்கள் எழுதித் தள்ளிய குப்பை இது.

பழைய பின்னூட்டங்களைப் படிக்குமாறு
வேண்டுகிறேன்.ஏற்கனவே பதிலளித்தாகி
விட்டது என்பதைத் தெரியப் படுத்துகிறேன்.
இதோ மீண்டும்  ..... 

    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக