பொது சகாப்தம் (Common Era) என்பதை
பொது ஆண்டு என்று மொழிபெயர்த்ததால் குழப்பம்!
ஒரு சேலையை இரண்டு பெண்கள் எப்படி
உடுத்த முடியும்?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
கிமு கிபி என்ற பதங்கள் நீக்கப்பட்டு
பொது சகாப்தம், பொது சகாப்தத்துக்கு முன்
என்று உலக அளவில் மாற்றப்பட்டு விட்டன.
தமிழக பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் தற்போது
இந்த மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
ஆனால் Common Era என்பதை பொது ஆண்டு என்று
மொழிபெயர்த்து உள்ளனர். இது தவறு.
ஆண்டு (YEAR) வேறு; சகாப்தம் (ERA) வேறு.
ஆண்டு (YEAR) என்பது வெறும் 365 நாள்.
சகாப்தம் (ERA) என்பது நூற்றுக்கணக்கான
ஆண்டுகளைக் கொண்ட ஒரு பெரும் காலப் பகுப்பு.
இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு பொருளைத்
தருபவை.
ஆனால், மொழிபெயர்த்தவர் YEAR, ERA என்னும்
இரண்டையும் ஆண்டு என்றே மொழிபெயர்த்து
உள்ளார். ஒரே சொல்லை வேறு வேறான
இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் மொழிபெயர்ப்பாக
ஆக்குவது, ஒரே சேலையை இரண்டு
பெண்களுக்குக் கொடுத்து உடுத்திக் கொள்ளச்
கூறும் மடமை ஆகும்.
சகாப்தம் என்ற சொல்லைத் தவிர்க்க
விரும்பினால், அதற்கு நிகரான வேறொரு
சொல்லை உருவாக்கிப் புழக்கத்துக்குக்
கொண்டு வர வேண்டும். அதற்கான ஆற்றல்
இல்லாத மூடர்கள் ஆண்டு என்ற சொல்லையே
இரண்டுக்கும் மொழிபெயர்ப்பாக ஆக்குவது
எப்படி இருக்கிறது தெரியுமா?
பொண்டாட்டி வேண்டுமெனில் குடும்பத்துக்கு
வெளியே ஒரு பெண்ணைத் தேட வேண்டும்.
வீட்டில் இருக்கும் தங்கச்சியையே பொண்டாட்டி
ஆக்குவது எப்படிப்பட்டதோ, அதே போலத்தான்
இதுவும்.
ERA என்பதற்கு நிகராக சகாப்தம் என்ற சொல்
பயன்பாட்டில் உள்ளது. இது பெருவழக்காக
உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி வீரமணி அவர்கள் "பெரியார் ஒரு சகாப்தம்"
என்று ஒரு நூலையே எழுதி உள்ளார்.
This is an era of proletarian revolution என்கிறார் லெனின்.
இதை எப்படி மொழிபெயர்ப்பது?
இது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தம்
என்றுதான் மொழிபெயர்க்கப் படுகிறது.
சகாப்தம் என்ற சொல்லி எடுத்து விட்டு
ஆண்டு என்ற சொல்லைப் போட்டால் என்ன
ஆகும்? இது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆண்டு
என்று பொருள் மாறி விடும்.
போலித்தனமான முட்டாள்தனமான தமிழ்ப்பற்றுடன்
கூடிய தற்குறிகள் தமிழ்நாட்டில் பாடநூல்களை
எழுதுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு புதிய
சொல்லையும் உருவாக்கும் ஆற்றலோ திறமையோ
கிடையாது.
பொது ஆண்டு என்று சொன்னதுமே எல்லோர்
மனதிலும் என்ன கேள்வி எழுகிறது?
பொது ஆண்டா? எந்த ஆண்டு பொது ஆண்டு?
என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? இதுதானே
குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இனியாவது திருந்துங்கள்.
ERA என்பதற்கு எனது மொழிபெயர்ப்பு
காலத்திரட்டு.
ERA = காலத்திரட்டு.
நீட்டம், நீள்காலம், காலநீட்சி, திரள்காலம், ஊழி,
நீளூழி, பல்லூழி, தொகுகாலம், காலத்தொகுப்பு,
காலப்பகுப்பு ஆகிய சொற்களைப் பரிசீலித்து
ஒதுக்கி விட்டு, காலத்திரட்டு என்ற சொல்
ஏற்ற சொல் என்று முடிவு செய்துள்ளேன்.
******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக