ஞாயிறு, 17 ஜூன், 2018

சுபா சுந்தரம் தமிழகத்தின் மிகவும் செல்வாக்குப் 
பெற்ற ஒரு புகைப்படக்காரர். அவர் தந்தை 
பெரியாரின் புகைப்படக் காரராக இருந்தவர்.
இவர்தான் ஏப்ரல் 18 மெரினா கடற்கரையில் 
நடந்த ராஜிவ்-ஜெயலலிதா கூட்டத்தைப் 
புகைப்பம் எடுத்தவர்.

இவர் எடுத்த புகைப்படங்களில் பல தமிழ் 
மற்றும் ஆங்கில இதழ்களில் வெளியாயின.
சிவராசனும் பேரறிவாளனும் நளினியும் அந்தக் 
கூட்டத்தில் இருந்தது இவரின் புகைப்படங்களில்
இருந்து தெரிய வந்தது. இவை யாவும் நீதிமன்றத்தில் 
சான்றாதாரமாக வைக்கப் பட்டன. மேலும் 
சுபா சுந்தரம் தான் எடுத்த புகைப்படங்களில் 
சிவராசன், பேரறிவாளன், நளினி ஆகியோர் 
இருந்தது உண்மையே என்று சாட்சியம் அளித்தார்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. அப்பாவியான 
பேரறிவாளன், 19 வயதே ஆன பேரறிவாளன்,
ராஜிவ்-ஜெயா கூட்டத்துக்குப் போனது ஏன்?
அதுவும் சிவராசன் நளினியுடன் போனது ஏன்?

அடுத்தபடியாக, பிரதமர் வி பி சிங்-கலைஞர் 
பங்கேற்ற கூட்டம். அதிலும் சிவராசன், நளினி,
சுபா, தாணு ஆகியோருடன் பேரறிவாளன் 
இருந்தது புகைப்பட ஆதாரங்களுடன் 
நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஆக, வலுவான அசைக்க முடியாத (unassailable evidence)
ஆதாரங்களின் பேரில்தான் குற்றவாளி என்று 
தீர்மானிக்கப் பட்டுள்ளார் பேரறிவாளன்.
இது நீதிமன்ற ஆவணங்களை, ,சாட்சியங்களை, 
தீர்ப்பை  படித்துப் பார்க்கும்போது தெரிய வருகிறது.

நீதிமன்றத்தில் நளினி அளித்த சாட்சியம்
குற்றவாளிகள் அனைவருக்கும் பெரும் பாதகமாகப் 
போய்விட்டது. சம்பந்தப்பட்ட எல்லோரையும் காட்டிக் 
கொடுத்து விட்டார். நளினி.எல்லா உண்மைகளையும் 
ஒன்று விடாமல் சொல்லி விட்டார் நளினி.

கொலைக்கு ஒத்திகை பார்க்கத்தான் வி பி சிங் 
கூட்டத்திற்கும் , ராஜிவ்-ஜெயா கூட்டத்திற்கும் 
சென்றோம் என்று உண்மையை உடைத்துச் சொல்லி  
விட்டார் நளினி .நீதிமன்ற ஆவணங்களை, நளினியின் 
சாட்சியங்களைப் படித்தால் இந்த உண்மை தெரிய வரும்.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக