வெள்ளி, 15 ஜூன், 2018

.     

ரம்ஜான்: அரசு விடுமுறை ரத்து!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
பிறை என்று தெரிகிறதோ
அல்லது என்று தெரியும் என்று மதகுரு
முடிவு செய்கிறாரோ
அந்த நாளில் இஸ்லாமியர்கள் ரம்ஜான்
கொண்டாடட்டும்.

ஆனால் அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை தேதியை
திடீர் திடீரென்று மாற்றுவது அரசு ஊழியர்களுக்கும்
பொது மக்களுக்கும் பெருத்த சிரமத்தை
ஏற்படுத்தும் விஷயம்.

சென்னையில் பிர்லா கோளரங்கம் இருக்கிறது.
இங்கு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்
(telescopes) உள்ளன. அவற்றின் மூலம் பார்த்தால்
பிறை தோன்றுவதைத் தெளிவாக அறிந்து
கொள்ள முடியும். எந்தப் பிறை என்று எப்போது
தோன்றும் என்பதை முடிவு செய்ய வல்ல
விஞ்ஞானிகள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும்
நிறையவே இருக்கிறார்கள். அவர்களின்
உதவியை நாடலாம். இந்த ஆலோசனையை
மதகுருக்கள் ஏற்காமல் போகட்டும்; அதுபற்றி
நமக்கு அக்கறை இல்லை

ஆனால் அறிவிக்கப்பட்ட விடுமுறை தேதியை திடீர்
திடீரென மாற்றிக் கொண்டு இருப்பது
எந்தக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.
இஸ்லாமியர்களின் மத விவகாரம் பொது
சமூகத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும்
பெருத்த சிரமத்தை ஏற்படுத்துவது நியாயம் அல்ல.

எனவே தமிழக அரசானது, தேதி அறிவித்த பின்பு
விடுமுறையை மாற்றக்  கூடாது என்று கேட்டுக்
கொள்கிறோம்.
***********************************************  
பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் நாளைக்கு
விடுமுறை (14.06.2018) என்று பள்ளியில் அறிவிக்கப்பட்டு
பிள்ளைகள் வீடு வந்தனர். ராத்திரி நேரத்தில் விடுமுறை
ரத்து என்ற அரசின் அறிவிப்பு வந்து சேர்க்கிறது.
குழந்தைகளைப் பாதிக்கும் இந்த முடிவை
அரசு கைவிட வேண்டும்.

நாளைக்கு  லீவு என்ற எண்ணத்துடன்  தூங்கி விட்ட
குழந்தைகளை தாய்மார்கள் எழுப்பி, நாளைக்கு
லீவு கிடையாது, ஸ்கூல் உண்டு, அஞ்சு மணிக்கு
எழுந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எத்தனை பேருக்கு சிரமம்!


---------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக