புதன், 13 ஜூன், 2018

மோசடியான புள்ளி விவரம்!
பெற்றோர்களின் நிம்மதியைப் பறிக்க வேண்டாம்!
-------------------------------------------------------------------------------------------
1) மதிப்புக்குரிய திரு வளன் அந்தோணி அவர்களுக்கு,

தாங்கள் திரு சிவகுமார் என்பவரின் பதிவைப்
பகிர்ந்து இருக்கிறீர்கள். அதில் பதிவின் தொடக்கத்தில்
கூறப்பட்ட புள்ளி விவரம் மோசடியானது என்பதைத்
தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

2) இந்தியாவில் மொத்த மருத்துவ இடங்கள் 63835 என்றும்
ஆகாஷ் பவுண்டேஷன் என்னும் தனியார் பயிற்சி
நிலையத்தில் படித்தவர்களில் 61649 பேர் நீட் தேர்வில்
தேறியுள்ளனர் என்றும். இந்த 61649 பேர் மொத்த மருத்துவ
இடங்களில் 96% இடங்களைக் கைப்பற்றக் கூடும்
என்று அப்பதிவு கூறுகிறது.

3) இது புள்ளி விவர மோசடியாகும். மொத்தம் நீட்
தேறியவர்கள் 7,14,562 பேர். இதில் ஆகாஷ் மையத்தில்
தேறியவர்கள் 61649 பேர். இது மொத்தம் தேறியவர்களில்
8.6 சதம் ஆகும். பதிவில் கூறுவது போல 96 சதம் அல்ல.

4) மொத்தம் தேர்ச்சி பெற்ற 7,14,562 பேருடன்தான்
ஆகாஷ் மையத்தில் படித்துத் தேறியவர்களை
ஒப்பிட வேண்டுமே தவிர, மொத்த மருத்துவ
இடங்களுடன் ஒப்பிடுவது புள்ளிவிவர மோசடி ஆகும்.

5) அடுத்து ஆகாஷ் மையத்தில் படித்துத்
தேறியவர்களில் குறைந்தபட்ச மதிப்பெண்
(minimum qualifying marks) 96 மற்றும் 119 எடுத்துத்
தேறியவர்களும் உள்ளடக்கம். இவர்களுக்கு
இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 300க்கு மேல்
மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே OBCயாக
இருந்தால் இடம் கிடைக்கப் பெறலாம். 400 மதிப்பெண்
இருந்தால் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு இடம்
கிடைக்க வாய்ப்பு. இதுதான் உண்மை நிலை.

6) நிலைமை இப்படியிருக்க, ஆகாஷில் படித்துத்
தேறிய 61649 பேரும்  மொத்த மருத்துவ இடங்களில்
96 சதம் இடங்களை அபகரித்துக் கொள்கிறார்கள்
என்று பொய்யை எழுதி, பெற்றோர்களின்
அமைதியைக் குலைப்பது நியாயம் ஆகாது.

7) பெற்றோர்களையும் மாணவர்களையும் தேவையற்ற
அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்குவது சமூக
விரோதச் செயல் ஆகும். பல பெற்றோர்கள் எங்களின்
கவனத்துக்கு இந்தப் பதிவை மிகுந்த பதைபதைப்புடன்
கொண்டு வந்ததன் பேரில் இந்தக் கடிதத்தைத்
தங்களுக்கு எழுதுகிறேன்.(We are forced to write this letter).

8) நீட்டை எதிர்ப்பது தங்களின் முற்றுரிமை. ஆனால்
அதற்காக, பொய்யான மோசடியான புள்ளி விவரத்தை
உண்மைபோலப் பதிந்து, பெற்றோர்களை
அமைதி இழக்கச் செய்து சமூகப் பதட்டத்தை
ஏற்படுத்த வேண்டாம் என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை
(கடிதம் முகநூல் பின்னூட்டம் வழியாக)
தொடர்புக்கு: newtonariviyalmantram@gmail.com
நாள்: 13.06.2018.
**************************************************                 


மதிப்புக்குரிய திரு ஏ சிவகுமார் அவர்களுக்கு,

நீட் ஆதரவு எதிர்ப்பு வாதப் பிரதிவாதங்களில்
அக்கறை கொண்டு எங்களின் கடிதம்
எழுதப்படவில்லை. பல பெற்றோர்கள் எங்களிடம்
"ஆகாஷில் படித்தவர்கள் மட்டுமே 96% இடங்களைப்
பெறுவதாக முகநூல் முழுவதும் செய்தி வருகிறதே,
உண்மையா?" என்று கேட்டனர். நேற்றும் இன்றும்
இதுவரை 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்!
பதில் சொல்லி மாறவில்லை.

பெற்றோரின் பரிதவிப்பும் ஆற்றாமையும் அமைதிப்
படுத்த இயலாத அளவில் இருந்தன. சமூக
வலைத்தளங்கள் இன்று  பரவலாக செல்வாக்குப்
பெற்றுள்ள நிலைமையை மனத்தில் கொண்டு,
தங்களைப் போன்றவர்கள் பதிவு எழுத வேண்டும்
என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

SPEED என்று ஒரு பிரபலமான நீட் பயிற்சி மையம்.
தமிழக அரசு இந்த SPEED பயத்துடன் ஒப்பந்தம்
போட்டு. 412 ஊர்களில் நீட் பயிற்சி அளித்தது.
அதிலும் சுமார் 3000 பேரை உணவு உறைவிட ஏற்பாட்டுடன்
விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளித்தது.
அப்பயிற்சியில் 1000க்கும் மேற்பட்டோர் தேறியுள்ளனர்.
அந்த 1000 பேரில், எங்களைத் தொடர்பு கொண்ட
பலருக்கு இடம் உறுதி. ஆகாஷில் படித்தவர்கள்
மட்டும் இடம் கிடைக்கப் பெறுவார்கள் என்ற
தங்களின் பதிவு இவர்கள் எல்லோரையும்
பதட்டத்தில் ஆழ்த்தி விட்டது.

எனவே அருள்கூர்ந்து சமூகப் பொறுப்புடன் எழுத
வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டிக்
கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
          

பல்கலைக் கழகங்கள் வழங்குகிற பட்டச்
சான்றிதழைப் படித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
"The Senate of the .......... University hereby makes known that ......"
என்று இருக்கும்.  பட்டம் பெற்றவர்களை ஊரறிய
உலகறியச் செய்வது பல்கலைகளின் கடமை.
இந்தியப் பல்கலைகள் மட்டுமல்ல, வெளிநாட்டுப்
பல்கலைகள் கூட இதே வாசகத்தைத்தான்
கொண்டிருக்கும்.

மொத்த சமூகத்தையும் கல்வியின்பால் நாட்டமும்
ஈர்ப்பும் கொள்ளச்செய்யும் பொருட்டு பட்டம்
பெற்றவர்கள் பெயருக்குப் பின்னால் பட்டத்தைக் 
குறிப்பிடுவது வழக்கமாகியது. இதில் தவறேதும்
இல்லை. மேலும் இது சமூகத்தின்  தேவையும் ஆகும்.

இதில் காழ்ப்படைய என்ன உள்ளது? பெயருக்குப்
பின்னால் பட்டத்தைப் போட்டுக் கொள்வது
பண்புடைய செயல் மட்டுமின்றி,அது ஒரு
கடமையும் ஆகும். கல்வியை மதிக்க விரும்பாதோர், 
பட்டம் பெறாதோர், பட்டம் பெற இயலாதோர் ஆகிய
நோயுற்ற மனத்தினருக்கு இது எரிச்சலைத் தரக்கூடும்.   
அவ்வளவே!





திரு வளன் அந்தோணி அவர்களுக்கு.

96 சதம் ஆகாஷுக்கு மட்டுமே என்ற பதிவு வெறும்
தட்டச்சுப் பிழையோ, கணக்கீட்டுப் பிழையோ,
சதவீதம் பற்றிய புரிதல் இன்மையோ அல்ல.
அப்படி இருந்தால் அதை நிச்சயமாக மன்னிக்கலாம்.
ஆனால் அந்தப் பதிவின் நோக்கம் வதந்தியைக்
கிளப்பி ஒரு சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துவது.
அந்தப் பதிவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின்
முறையீட்டைக் கணக்கில் கொண்டு, அவர்களுக்காக
எழுதப்பட்டது எங்கள் கடிதம். மற்றப்படி அந்தப்
பதிவின் பிற அம்சங்கள் பற்றி எங்களுக்கு
அக்கறை இல்லை.

தங்களின் பதிவினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்,
மாணவர்கள் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்ட
மனக்கிலேசம் குறித்தும் தங்களின் கவனத்திற்குக்
கொண்டு வந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின்
(victims) தரப்பில் நின்று அவர்களின் குமுறலை,
பாதிப்பை  ஏற்படுத்திய உங்களிடம் தெரிவிப்பது
மட்டுமே எமது கடிதத்தின் நோக்கம்.

என்னிடம் முறையிட்ட பலரில் ஒரு மாணவி 324 மதிப்பெண்,
MBC வகுப்பு. உறுதியாக இடம் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் உள்ள அந்தக் குடும்பம்,  தங்களைப்
போன்ற பலர் முகநூலில் கிளப்பிவிட்டுள்ள
வதந்தியால் சகல நம்பிக்கைகளும் நொறுங்கிப்
போன நிலையில் நியூட்டன் அறிவியல் மன்றத்திடம்
வந்தது. அவர்களை சமாதானப் படுத்தி நம்பிக்கையூட்டி
அனுப்பி வைத்தேன்.இது போல் பல நிகழ்வுகள்.

பொறுப்பற்ற முறையில் வதந்தி பரப்புவதும்,
பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்ட பின்னரும்
தங்களின் தவறை உணராமல் ஆணவத்துடன்
இருப்பதுமான போக்கு இருந்தால் என்ன செய்ய இயலும்?

இதுபோன்ற வதந்திகள் பல தற்கொலைகளுக்கு
சமூகத்தில் காரணம் ஆகிறது என்பதை
அருள் கூர்ந்து உணரவும்.

அடுத்து ஸ்டெர்லைட் பற்றிய எங்களின் பார்வை
இதுதான். ஸ்டெர்லைட் மட்டுமல்ல, வைகுண்டராஜனின்
நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்பதே.
இருபெருங்  கயவர்கள் என்ற கட்டுரையில்
இதைத் தெளிவாகக் கொடுத்துள்ளோம். ஆனால்
காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
என்பது போல், நீங்கள் பொய்யான அவதூறை
என் மீது சுமத்த முயற்சி .செய்கிறீர்கள். LMESக்கும்
எங்களுக்கும் ஸ்நானப் பிராப்தி கிடையாது. அது
ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பு.

தயவு செய்து, மருத்துவ இடம் கிடைக்கும் என்று
நம்பிக் கொண்டிருக்கிற பிள்ளைகளின்
நம்பிக்கையைக் கெடுத்து அவர்களை தற்கொலைக்குத்
தள்ளி விட வேண்டாம் என்பதே என் .வேண்டுகோள்.
அழிப்பது சுலபம்; ஆக்குவது கடினம்.

பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்.


இதில் விளையாட்டு எதுவும் இருக்கக் கூடாது ஐயா.
மருத்துவ அட்மிஷன் என்பது வயது வந்த பெரியவர்கள்
(adults) மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நீங்கள்
என்ன எழுதுகிறீர்கள் என்பதை 18 வயது நிரம்பாத
அந்தக் குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றன.
பெரியவர்கள் தங்களுக்கும் எப்படி வேண்டுமானாலும்
சண்டை போட்டுக் கொள்ளலாம். அனால் ஒரு விஷயத்தில்
குழந்திகளும் சம்பந்தப் பட்டுள்ளன என்ற நிலையில்
நாம் ஆயிரம் யோசனை செய்துதான் பேச வேண்டும்.
இதைத்தான் நான் கூற விரும்புகிறேன்.
 

வளன் அந்தோணி அவர்களே,
அருள்கூர்ந்து வார்த்தையை அளந்து பேசுங்கள்.
சொல்லப்பட்ட கருத்துக்கு ஏர்ப்போ மறுப்போ
கூறுவதை விடுத்து, தனிநபர் வசை, அவதூறுகளில்
இறங்க வேண்டாம்.

எங்கள் வேலை முடிந்தது!
உங்களிடம் தெரிவித்து விட்டோம்!
-----------------------------------------------------------------
மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் ஆகாஷில்
படித்தவர்கள் மட்டும்   இடங்களை  அபகரித்துக்
கொள்கிறார்கள் என்ற கணக்கீடு  தவறானது
என்று முந்தைய பதிவில் ஒத்துக் கொண்டுவிட்டு,
இப்போது  தவறில்லை என்று வாதாடினால்,
அது சரியா?

எங்களைப் பொறுத்த மட்டில்
உங்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை
( அதாவது பெற்றோர்களின் மனக்  கிலேசத்தை)
நாங்கள் தெரிவித்து விட்டோம். நீங்கள்
பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்
கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அந்தக்
கடிதம் மூலம் உங்களிடம் விஷயத்தைத்
தெரியப் படுத்தினோம். அதோடு எங்கள் வேலை
முடிந்து விட்டது.

நீங்கள் பதிவுக்கு மேல்  பதிவாக
எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். சரி, உங்களுக்கு
நேரம் இருக்கிறது, எழுதுகிறீர்கள். உங்களோடு
எங்களால் மல்லுக்கு நிற்க முடியாது.

திரு வளன் அந்தோணி அவர்களே,
தயவு செய்து பெற்றோர்களின் மனப்பதட்டத்தை
கணக்கில் கொள்ளுங்கள் என்பது மட்டுமே எங்களின்
ஒரே வேண்டுகோள்.

நன்றியுடன்,
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்.  
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக